குழந்தைகள் கையில் வசம்பு கட்டுவதற்கு காரணம் என்ன தெரியுமா.?

Advertisement

குழந்தைகளுக்கு கையில் வசம்பு காப்பு கட்டுவதற்கு காரணம் என்ன.? 

வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் குழந்தைகளுக்கு கையில் வசம்பு எதற்காக கட்டுகிறார்கள் என்று தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பொதுவாக குழந்தைகள் பிறந்த  16 ஆம் நாள் அன்று,  தலை குளிக்கவைத்து, புது ஆடைகள் உடுத்தி, நகைகள் போட்டும், பொட்டு வைத்து, அந்த குழந்தைக்கு பெயர் வைப்பார்கள், அந்த நாளில் அந்த குழந்தையின் கைகளில் வசம்புகளை கோர்த்து காப்பு போல கட்டி விடுவார்கள், ஆனால் இது எதற்காக  கட்டுகிறார்கள் என்று யாருக்கும் தெரியாது, கேட்டால் சாஸ்திரம் என்றும் சொல்வார்கள், மேலும் இதை ஏன் கட்டுகிறார்கள் என்று நம் பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம் வாங்க.

பிறந்த குழந்தை உடலை முறுக்குவது ஏன்?

vasambu bracelet for babies benefits in tamil:

பொதுவாக வசம்பில் அதிகமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன, இவற்றை குழந்தைகளுக்கு கையில் கட்டுவது ஏன் என்றும், வசம்பை அரைத்து குழந்தைகளுக்கு கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னவென்றும் தெரிந்து கொள்வோம்.

நமது முன்னோர்கள் பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் மருத்துவ பொருட்களில் வசம்பும் ஒன்றாகும், இந்த வசம்பை பண்டைய காலத்தில் இருந்தே, பிறந்த குழந்தைகளுக்கு கையிலும், காலிலும் காப்பு போல கட்டுவார்கள்.

இந்த வசம்பு காப்பை  குழந்தைகள் விளையாடும் பொழுது அதை வாயில் வைப்பதாலும், முகர்ந்து பார்ப்பதினாலும், குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, குமட்டல், போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது.

குழந்தைகள் கையில் இருக்கும் வசம்புகளை கடிக்கும் பொழுது அதில் இருக்கும் மருந்துகள், வயிற்றுப்பகுதிக்கு செல்வதினால், குழந்தைகளுக்கு வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகள் குணமாகி விடுகிறது.

வசம்பை தீயில் சுட்டு, அதை பொடி செய்து தேனில் குழைத்து  குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது வயிறு வீக்கம் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

வசம்பு தூளை தண்ணீரில் குழைத்து நெற்றியில் பொட்டு வைத்தால்,  பால் வாசனைக்கு வரும் பூச்சிகளை, குழந்தைகள் மீது அண்டவிடாமல் செய்யலாம். அதாவது  குழந்தைகளுக்கு வசம்பை  பூசிவிடுவதினாலும், குழந்தை படுக்கை முழுவதும் தூவி விடுவதினாலும், எந்த பூச்சிகளும் வராமல் தடுக்கலாம்.

வசம்பு தூளை தேங்காய் எண்ணெயில் குழைத்து, குழந்தையின் வயிற்று பகுதியில் பூசி வருவதால்,  வாயு தொல்லை நீங்கி விடும்.  இந்த வசம்பை பயன்படுத்துவதால் எவ்வளவு நன்மைகள் ஏற்படுகிறது என்று பார்த்தீர்களா.? எனவே இதை நீங்களும் உங்களுடைய குழந்தைகளுக்கு பயன்படுத்துங்கள்.

 

குழந்தை குளிக்கும் போது ஏன் அழுகிறது தெரியுமா..?
குழந்தை ஏன் அழுகிறது என்று தெரியுமா?

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன் 
Advertisement