Mangalore Inji Satni in Tamil
நண்பர்களே வணக்கம்..! நாம் எப்பொழும் இட்லி தோசைக்கு தேங்காய் சட்னி, பொட்டுக்கடலை சட்னி அரைத்து கொடுத்து அலுத்து போய்விட்டோம். எப்போதும் ஒரே மாதிரி செய்து சாப்பிடுவதற்கும் மிகவும் கடினமாக இருக்கும்.
அதனால் தினமும் ஒவ்வொரு வகையான சட்னி வகைகளை பற்றி பார்த்துக்கொண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று இஞ்சி சட்னி செய்முறை விளக்கத்தை பார்க்க போகிறோம் இது சாப்பிடுவதற்கும் மிகவம் சுவையாக இருக்கும். இஞ்சி பற்றிய நன்மைகளை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்யவும். 👉 செரிமான பிரச்சனை நீங்க இஞ்சி லேகியம்..!
தேவையான பொருட்கள்:
- எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
- கருப்பு உளுந்து – 2 டேபிள் ஸ்பூன்
- தனியா – 2 டேபிள் ஸ்பூன்
- சீரகம் – 1 டீஸ்பூன் ஸ்பூன்
- பூண்டு – 4 பல்
- இஞ்சி – 1 கைப்பிடி
- வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 10
- வெல்லம் – 1 டேபிள் ஸ்பூன்
- புளி தண்ணீர் – 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
இஞ்சி சட்னி செய்முறை:
இதையும் ட்ரை பண்ணுங்க 👉👉 தயிர், கடலை வைத்து இந்த சட்னி அரைத்து பாருங்கள் இட்லி மாவு காலியாகிவிடும்..!
ஸ்டேப்: 1
முதலில் கடாயை எடுத்து அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிகொள்ளவும்.
ஸ்டேப்: 2
அதில் கருப்பு உளுந்து – 2 டேபிள் ஸ்பூன், தனியா – 2 டேபிள் ஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன் ஸ்பூன் மூன்றையும் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
ஸ்டேப்: 3
பின்பு அதன் கூடவே, பூண்டு – 4 பல், இஞ்சி – 1 கைப்பிடி, வெந்தயம் – 1/4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 10 சேர்த்து நன்கு வதக்கவும்.
ஸ்டேப்: 4
பின்பு அனைத்தும் வதங்கிய பிறகு நன்கு ஆறவைத்து மிக்சி ஜாரில் சேர்த்து அதனுடன் வெல்லம் – 1 டேபிள் ஸ்பூன், புளி தண்ணீர் – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு சேர்த்து அரைக்கவும்.
அதன் பின் எப்போதும் போல் தாளிக்க சட்டியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை சேர்த்து அரைத்த சட்னியை சேர்க்கவும். அவ்வளவு தான் இட்லி தோசைக்கு சூப்பராக இருக்கும்.
இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉 ஒரு நிமிடத்தில் இட்லி தோசைக்கு சூப்பரான சட்னி..! வறுத்து அரைக்க வேண்டியதில்லை..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |