வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

காய்கறிகள் இல்லாமல் சுவையான குருமா செய்யலாம்.!

Updated On: October 31, 2023 12:26 PM
Follow Us:
kurma seivathu eppadi
---Advertisement---
Advertisement

காய்கறி இல்லாமல் குருமா செய்வது எப்படி.?

வணக்கம் நண்பர்களே இன்று நம் சமையல் குறிப்பில்  காய்கறிகள் இல்லாமல் குருமா வைப்பதை பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். வேலைக்கு சென்று வீட்டிற்கு வந்து சமையல் செய்யும் பெண்களுக்கு இந்த குருமா செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  இந்த குருமாவை நீங்கள் சுலபமாகவும், சீக்கிரமாகவும் செய்யலாம். இந்த குருமாவை சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை, பூரி போன்ற எல்லாவிதமான உணவுகளிலும் சேர்த்து சாப்பிடலாம். இப்படிப்பட்ட குருமாவை மிகவும் சுவையாக  எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.

உங்கள் வீட்டில் சப்பாத்தியா? மறந்துவிட்டு எப்போது போல் குருமாவை வைக்காதிங்க இதை ட்ரை பண்ணுங்க

காய்கறி இல்லாமல் குருமா செய்வதற்கு தேவையான பொருட்கள்:

  • கடலெண்ணெய்- 3 டேபிள் ஸ்பூன் 
  • பட்டை-1 
  • கிராம்பு -1
  • ஏலக்காய் -1
  • பிரிஞ்சி இலை -2
  • சோம்பு- 1 ஸ்பூன்
  • பூண்டு பல்-4
  • கருவேப்பிலை -சிறிதளவு 
  • பெரியவெங்காயம்-3
  • தக்காளி-4
  • உப்பு – தேவையான அளவு 
  • மஞ்சள்தூள் – கால் டேபிள் ஸ்பூன் 
  • மிளகாய் தூள்- 1 ஸ்பூன் 
  • மல்லித்தூள்1 ஸ்பூன் 
  • தேங்காய்- அரை முடி 
  • பச்சை மிளகாய்-3
  • பெருஞ்சீரகம்-1 ஸ்பூன் 

தக்காளி குருமா செய்வது எப்படி.?

ஸ்டேப்:1

முதலில் அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து ஒரு கடாயை வைக்க வேண்டும். அதன் பிறகு அதில் மூன்று ஸ்பூன் கடலை எண்ணெயை சேர்க்க வேண்டும். எண்ணெய் சூடானதும் கிராம்பு, பட்டை, பிரிஞ்சி இலை, சோம்பு, ஏலக்காய் போன்றவற்றை கடாயில் சேர்த்து பொன்னிறம் வரும் வரை வதக்க வேண்டும்.

ஸ்டேப்:2

அடுத்ததாக அதில் நான்கு பல் பூண்டு எடுத்து மசிச்சு கொண்டு அதை கடாயில்  சேர்க்க வேண்டும். அதன்பிறகு கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். வதக்கி  முடித்ததும் பெரிய வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும்.

ஸ்டேப்:3

இந்த வெங்காயத்தை ஒரு 10 நிமிடம் நன்றாக வதக்கவேண்டும். வெங்காயம் பொன்னிறம் வரும் வரை வதக்க வேண்டும். பின்பு வெங்காயம் பொன்னிறம் வந்ததும் அதில் நான்கு பெரிய தக்காளியை எடுத்து பொடிப் பொடியாக நறுக்கி கடாயில் சேர்க்க வேண்டும்.

ஸ்டேப்:4

தக்காளியை கொஞ்சம் அரைகுறையாக வதக்க வேண்டும். நன்றாக வதக்க வேண்டாம். இப்படி வதக்குவதினால் குருமா மிகவும் சுவையாக இருக்கும். வெங்காயம், தக்காளி கொஞ்சம்  வதங்குவதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

ஸ்டேப்:5

அடுத்ததாக வெங்காயம், தக்காளி வதங்கிய பிறகு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள்,  சேர்த்து  நன்றாக வதங்கிய பிறகு மல்லித்தூள் சேர்த்து வதக்க வேண்டும். பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும். வதக்கிய பிறகு உங்களுக்கு எவ்வளவு குருமா வேண்டுமோ அந்த அளவுக்கு தண்ணீர் சேர்த்து கலந்து விட வேண்டும்.

ஸ்டேப்:6

தண்ணீர் சேர்த்து  பிறகு நன்றாக கலக்கி விட வேண்டும். கடைசியாக இதில் சுவையாக இருக்க ஒரு மசாலா சேர்க்க வேண்டும். அரை மூடி  தேங்காய், பச்சை மிளகாய், பெருஞ்சீரகம் போன்றவற்றை எடுத்துக்கொண்டு அதில் தண்ணீர் சேர்த்து அரைக்கவேண்டும். அரைத்த பிறகு அதை கொதிக்கும் குருமாவில் கலந்து விட வேண்டும்.  அடுப்பை மிதமான சூட்டில் வைத்து 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். அவ்ளோ தாங்க குருமா ரெடி.!  பரிமாறி சாப்பிட வேண்டியது தான்.

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil

 

Advertisement

Abirami Baskar

Hello, I m Abirami working as Junior Content Writer in Pothunalam.com, I would like to write a topics based on the following categories such as Health Tips, Beauty Tips, Recipes, Home Improvements & Banking Tips.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

potato payasam recipe in tamil

விநாயகர் சதுர்த்திக்கு இப்படி ஒரு பாயசம் செய்து விடுங்கள்

மூக்கடைப்பு பிரச்சனையை தீர்க்கும் மிளகு சாதம்..!

Chicken Dum Biryani in Tamil

ஓண‌ம் ஸ்பெஷல்!!! சிக்கன் தம் பிரியாணி செய்முறை..!

Bread Spring Roll Recipe in Tamil

School -ல் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஸ்நாக்ஸ் செஞ்சி கொடுங்க..!

paruppu sadam in cooker tamil

பக்கத்து தெரு வரைக்கும் மணக்கும் ஐயர் வீட்டு பருப்பு சாதம் செய்வது எப்படி.?

Food To Boost Child Memory in Tamil

குழந்தைகளுக்கு ஞாபக மறதி நீங்கி ஞாபகசக்தி அதிகரிக்க இதை மட்டும் செய்து கொடுங்கள்..!

அடிக்கிற வெயிலுக்கு வீட்டிலேயே கேரட் ஐஸ் கிரீம் இந்த மாதிரி செஞ்சி சாப்பிட்டு பாருங்க..! டேஸ்ட் வேற லெவல இருக்கும்..!

mutton murtabak recipe in tamil

வாட்டர் பாட்டில் இருந்தால் ருசியான ஜாலர் முர்தபா செய்து பாருங்கள்

Mutton Fry Recipe  

பக்ரீத் ஸ்பெஷல் செட்டிநாடு மட்டன் பொரிச்ச கறி