கார பணியாரம் செய்வது எப்படி..?
நண்பர்களே வணக்கம்..! இந்த மழைக்காலத்தில் மாலை நேரம் வந்து விட்டால் என்ன சாப்பிட இருக்கிறது என்று தான் தோன்றும். எண்ணெய் பலகாரத்தை தான் முதலில் கேட்போம் அல்லவா? ஆனால் சிலர்க்கு மழைக்காலத்தில் எண்ணெய் பிடிக்காது அதேபோல் எண்ணெய் விலை யானை விலை விற்கிறது.
ஆகவே அதிக செலவுகள் இல்லலாமல் நல்ல ஆரோக்கியத்தையும் கொடுக்கும் விதத்தில் தெகட்டாமல் அதிகம் சாப்பிடக்கூடிய காரைக்குடி கார பணியாரம் செய்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்..!
கார பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்:
- தேங்காய் எண்ணெய் – 1/4 லிட்டர்
- கடுகு – 1 ஸ்பூன்
- கடலை பருப்பு – 1 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 4
- பெரிய வெங்காயம் – 1 நறுக்கியது
- கருவேப்பிலை – 1 கொத்து
- கேரட் – 1 கைப்பிடி சீவியது
- மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
- உப்பு மேல் கொடுக்கட்ட பட்ட காய்களுக்கு மட்டும் சேர்த்துக்கொள்ளவும்.
ஸ்டேப் – 1
முதலில் கடாயை வைக்கவும் அதில் தேங்காய் எண்ணெய் 50 கிராம் அல்லது உங்களுக்கு தேவையான அளவு ஊற்றிக்கொள்ளவும். பின்பு அதில் கடுகு – 1 ஸ்பூன் , கடலை பருப்பு – 1 ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4 சேர்த்து வதக்கவும்.
ஸ்டேப் – 2
வதங்கிய பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். வதங்கியதும் அதில், கருவேப்பிலை – 1 கொத்து , கேரட் – 1 கைப்பிடி சீவியது, மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் சேர்த்து கடைசியாக இந்த காய்களுக்கு தகுந்தது போல் உப்பு சேர்க்கவும்.
ஸ்டேப் – 3
இப்போது இட்டலி மாவை எடுத்து நாம் வதக்கிய அனைத்தையும் அதில் சேர்க்கவும்.
இப்போது பணியார சட்டியை வைத்து அதில் நெய் ஊறிக்கொள்ளலாம் அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் கலந்து வைத்த பணியார மாவை ஊற்றி அதன் பின் கடைசியாக அதன் மீதும் தேங்காய் எண்ணெய் ஊற்றி வேகவைக்கவும். சிறிது நேரம் கழித்து பின் புறம் திருப்பி போடவும். பின்பு கடைசியாக எடுத்து வைத்து சாப்பிடுங்கள் சுவை அள்ளும்.
ஈஸியான முட்டை பணியாரம் |
இட்லி மாவில் பணியாரம் செய்வது எப்படி |
சுவையான ரவை பணியாரம் செய்வது எப்படி? |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |