வெஜ் கொத்து சப்பாத்தி | Veg Kothu Chapathi in Tamil
நண்பர்களே வணக்கம் பொதுநலம் பதிவில் இன்று சமையல் குறிப்பில் அனைவருக்கும் பிடித்தமான முக்கியமாக குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபியை பற்றி பார்க்க போகிறோம். சப்பாத்தி என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் எப்போது ஒரே விதமான சப்பாத்தியை செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு புடிக்காமல் போய் விடும். அதனால் தான் இன்று சில்லி வெஜிடேபுல் கொத்து சப்பாத்தி எப்படி செய்வது என்பதை பற்றி பார்க்க போகிறோம்.
மீந்து போன சப்பாத்தியில் நூடுல்ஸ் செய்யலாம் வாங்க |
வெஜ் கொத்து சப்பாத்தி:
தேவையான பொருட்கள்:
- சப்பாத்தி – 4
- எண்ணெய் – தேவையான அளவு
- கடுகு – 1/2 ஸ்பூன்
- பட்டை கிராம்பு – சிறிதளவு
- பச்சை மிளகாய் – 04
- கருவேப்பிலை – 1 கொத்து
- இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
- வெங்காயம் – 2 (நறுக்கியது)
- மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
- மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
- கரம் மசாலா – 1/4 ஸ்பூன்
- சீரகத்தூள் – 1/2 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- தக்காளி – 2 (நறுக்கியது)
- மல்லி தழை – சிறிதளவு
- பச்சை பட்டாணி – 1/2 கப்
- கேரட் – 2 (நறுக்கியது)
செய்முறை விளக்கம்:
ஸ்டேப்:-1
- முதலில் அடுப்பில் கடாயை வைக்கவும். வைத்த பின் அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றிக்கொள்ளவும்.
ஸ்டேப்:-2
- எண்ணெய் சூடான பிறகு அதில் கடுகு போடவும். கடுகு பொரிந்த பின் அதில் பட்டை, கிராம்பு போடவும்.
ஸ்டேப்:-3
- பிறகு அதில் கருவேப்பிலை போட்டு கொள்ளவும். அதனுடன் இஞ்சி பூண்டு விழுது போடவும் அது கூடவே 4 பச்சை மிளகாய் போட்டு வதக்கி கொள்ளவும்.
ஸ்டேப்:-4
- நன்கு வதக்கிய பின் அதில் நறுக்கிய வெங்காயம் போட்டு கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்கிக்கொள்ளவும்.
ஸ்டேப்:-5
- வெங்காயம் நன்கு வதங்கிய பின் அதில் தேவையான மசாலாவை சேர்த்துக்கொள்வோம். முதலில் மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், மிளகாய் தூள் – 1 ஸ்பூன், கரம் மசாலா – 1/4 ஸ்பூன், சீரகத்தூள் -1/2 ஸ்பூன் போட்டு நன்கு கிளறி விடவும்.
ஸ்டேப்:-6
- அதன்பின் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும். அதனுடன் நறுக்கி வைத்துள்ள 2 தக்காளியை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
சப்பாத்தி, பூரி, இட்லி, தோசைக்கு ஏற்ற செம சைடிஷ்..! |
ஸ்டேப்:-7
- கடைசியாக அவித்து வைத்த பச்சை பட்டாணியை சேர்க்கவும், அதனுடன் சிறிதாக நறுக்கிய கேரட் 1 நிமிடம் சேர்த்து வதக்கவும்.
ஸ்டேப்:-8
- 1 நிமிடத்திற்கு பிறகு நறுக்கிய 4 சப்பாத்தியை சேர்த்து கிளறி விடவும். கடைசியாக மல்லி தழை சேர்த்து கிளறி இறக்கவும். அனைவருக்கும் சூப்பரான சுவையான சில்லி கொத்து சப்பாத்தி ரெடி
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |