தயிர் வடை செய்வது எப்படி
நண்பர்களே வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவருக்கும் சுலபமான முறையில் தயிர் வடை செய்வது எப்படி என்பதை இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்ள போகிறோம்..! பொதுவாக தயிர் வடையை கடையில் சாப்பிட்டு விட்டு வீட்டில் செய்தால் அது கடையில் சாப்பிட்டது போல் இருக்கும். அது நாம் செய்யும் சிறு சிறு தவறாக இருக்கும். ஆகையால் சூப்பராக வீட்டிலேயே தயிர் வடை செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க..!
தயிர் வடை செய்முறை:
ஸ்டேப்: 1
மெதுவடை செய்வது போல் மாவை அரைத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
ஸ்டேப்: 2
அடுத்து ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் 2 துண்டு இஞ்சி, 1 பச்சை மிளகாய் 2 டேபிள் ஸ்பூன் கெட்டியான தயிர், 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல் அனைத்தையும் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைத்து அப்படியே வைக்கவும்.
ஸ்டேப்: 3
இப்போது இரண்டு கப் அளவுக்கு புளிக்காத தயிர் எடுத்துக்கொள்ளவும், அதனை நன்கு கலந்துகொள்ளவும். அதில் 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும்.
10 நிமிடத்தில் பருப்பு வடை மாதிரி ஒரு வடை ஆனால் இதன் சுவை வேறமாதிரி |
ஸ்டேப்:4
அடுத்து கலந்து வைத்துள்ள தயிரில் மிக்சி ஜாரில் உள்ள பேஸ்டை அதில் சேர்க்கவும், அதனையும் கலந்து தனியாக வைக்கவும்.
ஸ்டேப்:5
அடுத்து ஒரு கடாயில் நல்லெண்ணெய் சிறிதளவு ஊற்றி அதில் 1 ஸ்பூன் கடுகு, 1/4 ஸ்பூன் சீரகம் போட்டு, அதனுடன் பெருங்காயம் சேர்த்து பொரிந்தவுடன் அதில் கருவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும். அதனை எடுத்து கலந்து வைத்த தயிரில் சேர்த்து கலந்துகொள்ளவும். இப்போது தயிர் வடைக்கு தேவையான தயிர் ரெடி.
ஸ்டேப்: 6
இப்போது அரைத்துவைத்த வடை மாவை எடுத்து எண்ணையில் போட்டு எடுத்துக்கொள்ளவும்.
ஸ்டேப்: 7
தயிர் வடை உடனே சாப்பிட வேண்டும் என்றால் ஒரு பாத்திரத்தில் மிதமான சூட்டில் தண்ணீர் வைக்கவும். அதன் பின் அதில் அந்த வடையை எடுத்து சூடான தண்ணீல் போட்டு எடுக்கவும்.
ஸ்டேப்: 8
தண்ணீரில் போட்ட பின் அதனை ஒரு தட்டில் வைத்து அதன் மீது கலந்து வைத்த தயிரை ஊற்றவும். அதன் மீது கொத்தமல்லி சேர்த்து அதன் மீது மிக்ஸர், காரம் சார்ந்த பொருளை சேர்த்து சாப்பிட்டால் சுவை சூப்பராக இருக்கும்.
இதையும் செய்து பாருங்கள் 👉👉 வெங்காயம் வைத்து மிகவும் சுவையான வடை இப்படி செஞ்சி பாருங்க..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |