பூண்டு ஊறுகாய் எப்படி செய்ய வேண்டும்? | Garlic Pickle Recipe in Tamil
பூண்டு ஊறுகாய் செய்வது எப்படி: ஊறுகாய் என்றாலே பலருக்கும் பிடித்த சைடிஷ். ஒரு சிலர் சாப்பாட்டிற்கு எந்த சைடிஷும் இல்லையென்றால் இந்த ஊறுகாய் இருந்தால் போதும் என்று சொல்வார்கள். ஊறுகாய் பிரியர் உலகில் பலக்கணக்காணோர் இருக்கிறார்கள். ஊறுகாயில் பல விதமான ஊறுகாய் வகைகள் உள்ளது. இஞ்சி பூண்டு ஊறுகாய் மாங்காய் ஊறுகாய், நெல்லிக்காய் ஊறுகாய், பூண்டு ஊறுகாய், நார்த்தங்காய் ஊறுகாய், எலுமிச்சை ஊறுகாய் போன்று பல வகைகள் உள்ளன. இன்றைய சமையல் குறிப்பு பகுதியில் இரண்டு பிளேட் கூடுதலாக சாப்பிட தூண்டும் பூண்டு ஊறுகாய் (poondu oorugai in tamil) எப்படி வீட்டிலே ஈசியாக செய்யலாம்னு தெரிஞ்சிக்கலாம் வாங்க..
மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி |
பூண்டு ஊறுகாய் செய்ய – தேவையான பொருள்:
- உறித்து வைத்த பூண்டு – 1/4 கிலோ
- வறுத்து பொடி செய்த வெந்தய பொடி – 1 ஸ்பூன்
- மிளகாய்த்தூள் – 3 ஸ்பூன்
- கடுகு – தாளிக்க தேவையான அளவு
- வெல்லம் – 2 ஸ்பூன்
- கருவேப்பிலை – தேவையான அளவு
- புளி – ஒரு எலுமிச்சை அளவு (ஊறவைத்து கரைசல்)
- பெருங்காயத்தூள் – தேவையான அளவு
- நல்லெண்ணெய் – 1 ஸ்பூன்
பூண்டு ஊறுகாய் செய்முறை விளக்கம்:
ஸ்டேப்: 1
பூண்டு ஊறுகாய் செய்ய முதலில் கடாயில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி உறித்து வைத்துள்ள பூண்டை நன்றாக வதக்கிக்கொள்ளவும். நன்றாக வதங்கியதும் அடுப்பை நிறுத்திக்கொள்ளலாம்.
ஸ்டேப்: 2
நன்றாக பூண்டு ஆறியதும் மிக்ஸி ஜாரில் அரைத்துக்கொள்ளவும்.
ஸ்டேப்: 3
பூண்டு வறுத்த அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சிறிதளவு கடுகு சேர்த்து தாளிக்கவும்.
ஸ்டேப்: 4
கடுகு நன்றாக பொரிந்ததும் கருவேப்பிலை சேர்க்கவும். அதனுடன் வெந்தய பொடி கொஞ்சமாக சேர்க்கவும்.
ஸ்டேப்: 5
அடுத்து மிக்ஸி ஜாரில் ஆற வைத்து அரைத்துவைத்துள்ள பூண்டு விழுதினை சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கிண்டவும்.
ஸ்டேப்: 6
அடுத்து கொஞ்சமாக பெருங்காயத்தூளை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும்.
பூண்டு ஃப்ரைட் ரைஸ் |
ஸ்டேப்: 7
அடுத்து உங்களுக்கு காரத்திற்கேற்ப மிளகாத்தூளை சேர்த்து வதக்கிவிடவும். இப்போது ஊறவைத்து கரைத்து வைத்த புளி கரைசலை அதில் சேர்த்து கிண்டவும்.
ஸ்டேப்: 8
அடுத்ததாக தேவையான அளவிற்கு உப்பு, வெல்லம் சேர்த்து கிளறவும். எண்ணெய்யானது மேலே திரிஞ்சி வரும் அளவிற்கு இதை நன்றாக கிளறவும்.
ஸ்டேப்: 9
எண்ணெய் நன்றாக மேலே திரிஞ்சி வந்ததும் அடுப்பை நிறுத்திக்கொள்ளலாம். டேஸ்டான பூண்டு ஊறுகாய் ரெடி. ஊறுகாயை எப்போதும் சூடோடு மூடி வைக்க கூடாது. ஊறுகாய் ஆறியதும் தனியாக ஒரு பாட்டிலில் வைத்துக்கொள்ளலாம். பல நாட்கள் கெடாமல் அப்படியே இருக்கும்..
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |