மட்டன் பொரிச்ச கறி செய்முறை – Mutton Fry Recipe
அனைவருக்கும் பக்ரீத் வாழ்த்துக்கள்.. இன்று உங்கள் வீட்டில் மட்டன் கொண்டு ஒரு அட்டகாசமான மற்றும் வித்தியாசமான ரெசிபியை செய்து அசத்திட ஆசையா? அப்படினா செட்டிநாடு ஸ்டைலில் மட்டன் பொரிச்ச கறி செய்து விடலாம் வாங்க. சரி இந்த செட்டிநாடு மட்டன் பொரிச்ச கறி எப்படி செய்ய வேண்டும்? இதற்கு என்னென்ன பொருட்கள் தேவைப்படும் போன்ற தகவல்களை கீழ் படித்தறியலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:
- எலும்பு நீக்கிய மட்டன் – 1/4 கிலோ
- மிளகாய்த்தூள் – 50 கிராம்
- மஞ்சள் தூள் – 10 கிராம்
- தனியா தூள் – 40 கிராம்
- சீரகத்தூள் – 30 கிராம்
- சோம்பு – 10 கிராம்
- இஞ்சி – 1 துண்டு
- பூண்டு – 5 பல்
- பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 100 கிராம்
- பொரிக்க தேங்காய் எண்ணெய்
- உப்பு – தேவையான அளவு
- நெய் – 50 மி.லி
- கொத்தமல்லித்தழை – தேவையான அளவு
செட்டிநாடு மட்டன் பொரிச்ச கறி செய்முறை – Bakrid special Poricha Kari:
ஸ்டேப்: 1
எலும்பில்லாத மட்டனை நன்றாக சுத்தம் செய்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 2
பின் ஒரு சுத்தமான பாத்திரத்தில் மட்டன் துண்டுகள், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், இஞ்சி பூண்டு விழுது ஆகிய பொருட்களை சேர்ந்து நன்றாக பிசையவும். பின் 10 நிமிடங்களை நன்றாக ஊறவைக்கவும்.
ஸ்டேப்: 3
பிறகு அடிகனமான கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடேற்றவும், எண்ணெய் சூடேறியதும் ஊறிய மட்டன் துண்டுகளை பொரித்தெடுத்து தனியே வைக்கவும்.
ஸ்டேப்: 4
கடாயில் நெய் சேர்த்து வெங்காயத்தை வதக்கி பொரித்த மட்டனை போட்டு கிளறி இறக்கவும். அவ்வளவு தான் சுவையான மற்றும் வித்தியாசமான செட்டிநாடு மட்டன் பொரிச்ச கறி ரெடி..
இதையும் கிளிக் செய்து படியுங்கள் → பக்ரீத் ஸ்பெஷல்!!! சிக்கன் தம் பிரியாணி
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |