Bread Breakfast Recipes in Tamil
பெரும்பாலும் காலை உணவுகளுக்கு சமைப்பது இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவை தான். குழந்தைகளுக்கு புதிதாக ஏதாவது ட்ரை செய்யலாமே! புதிதாகவும் சீக்கிரமாகவும் காலை உணவு செய்ய நினைக்குறீர்களா? பிரட்டில் பல உணவு வெரைட்டிகள் இருக்கின்றன. அவற்றுகள் நாம் இப்பதிவில் பார்க்க இருக்கும் ரெசிபி 5 நிமிடத்தில் பிரட் வைத்து எப்படி காலை உணவினை தயார் செய்வது என்பதை பற்றித்தான்!
இந்த ரெசிபி செய்வது மிக மிக எளிது! 5 நிமிடத்தில் சீக்கிரமா பண்ணிடலாம்! குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ரெசிபி கூட கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
தேவையான பொருட்கள்:
- நார்மல் பிரட் அல்லது வீட் பிரட் – 6 துண்டுகள்
- குடை மிளகாய் – 1
- பச்சை மிளகாய் – 2
- பெரிய வெங்காயம்(Medium Size) – 2
- பெரிய வெங்காயம் – 1
- வெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
- தக்காளி சாஸ் – 1 கப்
- காரத்திற்கேற்ப பச்சை மிளகாய் சாஸ்
- சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
செய்முறை:
ஸ்டேப் 1:
👉1 கப் இட்லி மாவு 1 கப் தேங்காயில் சூப்பரான ரெசிபி..!
முதலில் குடை மிளகாய், பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் இவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும்.
ஸ்டேப் 2:
பிரட்டினை தோசை கல்லில் போட்டு இரண்டு பக்கங்களும் நன்றாக வறுத்துக்கொள்ளவும். பிரட் ரொம்ப கலர் மாறாமல் சரியான பதத்தில் வறுக்க வேண்டும்.
ஸ்டேப் 3:
வாய்க்கு ருசியாக மாலை நேரத்தில் பருப்பு போளி செஞ்சிடுங்க..!
வறுத்த பிரட்டுகளை சதுர வடிவில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஸ்டேப் 4:
ஒரு கடாயில் வெண்ணெயினை சேர்க்க வேண்டும் அல்லது சமையலுக்கு பயன்படுத்தும் ஆயில் சேர்க்கலாம்.
ஸ்டேப் 5:
வெண்ணெய் உருக தொடங்கிய பின் வெட்டி வைத்துள்ள காய்கறிகளை சேர்க்க வேண்டும். அதனை நன்கு வதக்க வேண்டும்.
ஸ்டேப் 6:
வதங்கிய பின்னர் அதனுடன் தக்காளி சாஸ், காரத்திற்கேற்ப பச்சை மிளகாய் சாஸ் மற்றும் சோயா சாஸ் சேர்க்க வேண்டும். அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். (சாஸ் உங்களுக்கு சேர்க்க விருப்பம் இல்லை என்றால் 3 தக்காளி, காரத்திற்கேற்ப பச்சை மிளகாய் சேர்த்துக்கொள்ளலாம்)
ஸ்டேப் 7:
பின் அதனுடன் வெட்டி வைத்துள்ள பிரட் துண்டுகளை சேர்க்க வேண்டும். பிரட்கள் உடையாத அளவிற்கு அதனை கலந்து விட்டு இறக்க வேண்டும்.
👉பிரட் சில்லி செய்வது எப்படி | Bread Chilli Recipe in Tamil
இந்த ரெசிபியை காலை உணவு மட்டும் அல்ல மாலை ஸ்னாக்ஸ் மற்றும் இரவு உணவாகவும் சாப்பிடலாம்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal |