அப்பள குழம்பு செய்வது எப்படி?

Advertisement

Appalam Kulambu Seivathu Eppadi

ஹாய் பிரண்ட்ஸ் இன்னைக்கி நாம நாவிற்கு ருசியான ஒரு அருமையான குழம்பு எப்படி வைக்க வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த குழம்பிற்கு எந்த ஓர் சைடிஷ்ம் வெறும் குழம்பு இருந்த போதும் வேறு எதுவும் தேவை இல்லை. அதாவது கிராமத்து ஸ்டைல் அப்பளம் குழம்பு எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். சரி வாங்க அப்பளம் குழம்பு செய்ய தேவைப்படும் பொருட்கள் மற்றும் சரியான பக்குவத்தில் அப்பள குழம்பு செய்வது எப்படி என்பதை பற்றி இப்பொழுது தெளிவாக பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  1. அப்பளம் – 6 to 7
  2. சின்ன வெங்காயம் – 1/4 கிலோ
  3. தக்காளி – 1
  4. காய்ந்த மிளகாய் – 5
  5. பூண்டு – 15 பற்கள்
  6. புளி – ஒரு பெரிய எலுமிச்சை அளவு
  7. தேங்காய் பால் – 1/2 கப்
  8. மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  9. குழம்பு தூள் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
  10. கருவேப்பில்லை – தேவையான அளவு
  11. கொத்தமல்லி இலை – தேவையான அளவு
  12. சீரகம் – சிறிதளவு
  13. கடுகு – 1/4 டீஸ்பூன்
  14. உப்பு – தேவையான அளவு
  15. எண்ணெய் – தேவையான அளவு

அப்பள குழம்பு செய்வது எப்படி? – செய்முறை விளக்கம் – Appalam Kulambu Recipe:

ஸ்டேப்: 1

அடுப்பில் ஒரு அடி கனமான பாத்திரத்தை வைத்து அவற்றில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடேறியதும் கடுகை சேர்க்கவும்.

ஸ்டேப்: 2

கடுகு நன்கு பொரிந்து வந்த பிறகு சிறிதளவு சீரகம், பூண்டு, காய்ந்த மிளகாய், கருவேப்பில்லை ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.

ஸ்டேப்: 3

பிறகு நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வெந்து வந்ததும், நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.

ஸ்டேப்: 4

தக்காளி நன்கு வதங்கி வந்ததும் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

ஸ்டேப்: 5

பிறகு குழம்பு தூள் 1 1/2 டேபிள் ஸ்பூன் சேர்க்க வேண்டும் (குழம்பு தூள் இல்லை என்றால் பார்வை இல்லை அதற்கு பதில் முக்கால் ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் மல்லி தூள் சேர்த்து கொள்ளலாம்) இப்பொழுது இந்த மசாலாவையும் நன்றாக வதக்க வேண்டும்.

ஸ்டேப்: 6

மசால் நன்கு வதங்கிய பின் சிறிதளவு தண்ணீர் (முக்கால் டம்ளர்) ஊற்றி கொதிக்க விடவும். மாலாவை கொதிக்க வைத்த இரண்டு நிமிடம் கழித்து அவற்றில் இருந்து எண்ணெய் தனியா பிரிந்து வரும். இவ்வாறு எண்ணெய் பிரிந்து வரும் போது புளியை கரைத்து ஊற்றவும்.

ஸ்டேப்: 7

புளியை கரைந்து ஊறிய பிறகு 4 முதல் 5 டம்ளர் வரை தண்ணீர் ஊற்றில் நன்றாக கலந்து விடுங்கள் பிறகு 10 நிமிடம் குழம்பை நன்றாக கொதிக்க வைக்கவும்.

ஸ்டேப்: 8

பத்து நிமிடம் கழித்த பிறகு 1/2 கப் தேங்காய் பால் மற்றும் பொடிதாக நறுக்கிய கொத்தமல்லி இலை ஆகியவற்றை சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

ஸ்டேப்: 9

பிறகு அப்பளத்தை பொரித்து நான்கு துண்டுகளாக உடைத்து குழம்பில் சேர்த்து கிளறி விடுங்கள், இறுதியாக சிறிதளவு கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால் சுவையான மற்றும் அருமையான அப்பளம் குழம்பு தயார் உங்கள் வீட்டில் ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள் நன்றி வணக்கம்.

சிக்கன் கிரேவி இப்படி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா ஆளா தூக்கும்!!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement