வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தீபாவளி ஸ்பெஷல் அசோகா அல்வா இந்த மாதிரி செய்யுங்கள்.!

Updated On: October 30, 2024 4:57 PM
Follow Us:
ashoka halwa recipe in tamil
---Advertisement---
Advertisement

அசோகா அல்வா செய்வது எப்படி.?

இன்றைய பதிவில் சாப்பிட சாப்பிட திகட்டாத அசோகா அல்வா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம். அல்வா நிறைய நபர்களுக்கும் பிடிக்கும். ஆனால் அதிகம் சாப்பிட முடியாது. சிறிதளவு சாப்பிட்டாலே திகட்ட ஆரம்பித்து விடும். ஆனால் அசோகா அல்வா அப்படி இல்லை. சாப்பிட சாப்பிட ருசியாகவும், திகட்டவே திகட்டாது. பெரும்பாலானவர்கள் இதை கடையில் தான் வாங்கி சாப்பிடுவார்கள். வீட்டில் செய்தால் கடையில் வாங்கி சாப்பிடுவது போல் ருசியாக இருக்காதோ என்று நினைப்பார்கள். ஆனால் இனிமேல் கடையில் வாங்கி சாப்பிடுவது போல வீட்டிலே செய்யலாம். அதற்கு நீங்கள் இந்த பதிவை முழுமையாக படிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள் ⇒ சுவையான குலாப் ஜாமூன் அல்வா இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்…!

அசோகா அல்வா செய்ய தேவையான பொருட்கள்:

  1. பாசிப்பருப்பு- 1/2 கப் 
  2. நெய் – 1/2 கப் 
  3. சர்க்கரை- 1 கப் 
  4. கோதுமை மாவு – 2 தேக்கரண்டி
  5. ஏலக்காய் தூள்- சிறிதளவு
  6. முந்திரி – சிறிதளவு

அசோகா அல்வா செய்முறை:

how to make ashoka halwa in tamil

ஸ்டேப்:1

முதலில் பாசிப்பருப்பை கழுவி விட்டு தண்ணீர் ஊற்றி வேக வையுங்கள். இந்த பருப்பானது நன்றாக பேஸ்ட் மாதிரி வேக வேண்டும். பருப்பு வெந்த பிறகு அதை மசித்து கொள்ளலாம். இல்லையென்றால் நன்றாக அரைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்:2

பின் அடுப்பை பற்ற வைத்து கடாய் வைத்து கொள்ளுங்கள். கடாய் சூடானதும் எடுத்து வைத்திருக்கும் நெய்யில் 1/4 கப் நெய் மட்டும் ஊற்றி கொள்ளுங்கள். நெய் உருகியதும் சிறிதளவு முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறம் வரும் வரை வதக்குங்கள். பொன்னிறம் வந்ததும் தனியாக எடுத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்:3

பிறகு அதே கடாயில் 2 தேக்கரண்டி கோதுமை மாவு சேர்த்து 1 நிமிடம் வரை வதக்குங்கள். பின் அரைத்து வைத்த பேஸ்ட்டை சேருங்கள். பின் கட்டி ஆகாமல் கரண்டியை பயன்படுத்தி கிண்டி விட்டே இருங்கள். ஒரு 2 நிமிடம் வெந்ததும் 1 கப்  சீனியை சேருங்கள்.

ஸ்டேப்:4

சீனி சேர்த்ததும் இளகிய பதம் வரும். ஆனால் கொஞ்ச நேரத்திலே கெட்டியான பதத்திற்கு வந்துவிடும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நெய்யை சேர்த்து கொண்டே இருங்கள்.

ஸ்டேப்:5

உங்களுக்கு விருப்பம் இருந்தால் அதில் கலர் பவுடர் சேர்க்கலாம். இல்லையென்றால் அப்படியே இருக்கலாம். பின் அசோகா பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும் அந்த பதத்தில் ஏலக்காய் தூள், வறுத்து வைத்திருக்கின்ற முந்திரி பருப்பு, நெய் போன்றவற்றை சேர்த்து கலந்து விடுங்கள்.

ஸ்டேப்:6

அவ்வளவு தாங்க வாயில் போட்டாலே சும்மா சல்லுன்னு உள்ளாரா போகின்ற அசோகா அல்வா ரெடி..! உங்கள் வீட்டிலும் செய்து சுவைத்து பாருங்கள்..!

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Bread Spring Roll Recipe in Tamil

School -ல் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஸ்நாக்ஸ் செஞ்சி கொடுங்க..!

paruppu sadam in cooker tamil

பக்கத்து தெரு வரைக்கும் மணக்கும் ஐயர் வீட்டு பருப்பு சாதம் செய்வது எப்படி.?

Food To Boost Child Memory in Tamil

குழந்தைகளுக்கு ஞாபக மறதி நீங்கி ஞாபகசக்தி அதிகரிக்க இதை மட்டும் செய்து கொடுங்கள்..!

அடிக்கிற வெயிலுக்கு வீட்டிலேயே கேரட் ஐஸ் கிரீம் இந்த மாதிரி செஞ்சி சாப்பிட்டு பாருங்க..! டேஸ்ட் வேற லெவல இருக்கும்..!

mutton murtabak recipe in tamil

வாட்டர் பாட்டில் இருந்தால் ருசியான ஜாலர் முர்தபா செய்து பாருங்கள்

Mutton Fry Recipe  

பக்ரீத் ஸ்பெஷல் செட்டிநாடு மட்டன் பொரிச்ச கறி

Homemade Ice Cream Recipe in Tamil

இந்த 2 பொருட்கள் இருந்தால் போதும் வீட்டிலே 4 வகையான ஐஸ்கிரீம் செய்யலாம்..!

பஞ்சாபி லஸ்ஸி செய்வது எப்படி | Sweet Lassi Recipe in Tamil

முருகருக்கு பிடித்த திருப்பாகம் செய்வது எப்படி.?