வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மிகவும் ருசியான அவல் உருளைக்கிழங்கு கட்லெட் செய்வது எப்படி..?

Updated On: December 21, 2023 6:39 PM
Follow Us:
Aval Cutlet Recipe in Tamil
---Advertisement---
Advertisement

Aval Cutlet Recipe in Tamil..!

ஹலோ நண்பர்களே… இன்றைய பதிவில் நாம் மிகவும் ருசியான குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பெரியவர்களும் விரும்பி சாப்பிடக்கூடிய  சுவையான அவல் உருளைக்கிழங்கு கட்லெட் செய்வது எப்படி என்பதை பற்றி தான் பார்க்கப் போகிறோம். எவ்வளவு தான் நாம் கடைகளில் கிடைக்கும் உணவுகளை வாங்கி சாப்பிட்டாலும் அதில் ஆரோக்கியம் குறைவாக தான் இருக்கும்.

அதனால் நாம் நம் குழந்தைகளுக்கு வீட்டிலே அருமையான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை செய்து கொடுக்கலாம். அதுபோல வீட்டிலேயே ஆரோக்கியமாக செய்து சாப்பிட அவல் உருளைக்கிழங்கு கட்லெட் செய்து சாப்பிட்டு பாருங்கள். தினமும் செய்து சாப்பிட வேண்டும் என்று நினைப்பீர்கள். நாம் இன்று இந்த பதிவில் ருசியான அவல் கட்லெட் எப்படி செய்வது என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.

இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ பிஸ்கட் பேடா ஸ்வீட் செய்வது எப்படி

கட்லெட் செய்ய தேவையான பொருட்கள்:

  1. உருளைக்கிழங்கு – 3
  2. அவல் – ஒரு கப்
  3. பெரிய வெங்காயம் – 1
  4. பச்சை மிளகாய் – 2
  5. இஞ்சி – சிறிதளவு
  6. பூண்டு – 2 பல்
  7. மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
  8. மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  9. தனியா தூள் – 1/2 ஸ்பூன்
  10. கரம் மசாலா – 1 ஸ்பூன்
  11. எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
  12. கொத்தமல்லி தழை – சிறிதளவு
  13. உப்பு – தேவையான அளவு

அவல் கட்லெட் செய்முறை:

ஸ்டெப்:1

முதலில் உருளைகிழங்கை நன்கு வேக வைக்க வேண்டும். பின் அதன் தோலை உரித்து அதை நன்கு பிசைந்து ஒரு பாத்திரத்தில் வைக்க வேண்டும்.

பின்னர் அவுலை  15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். அவல் நன்றாக ஊறிய பின், தண்ணீரை வடிகட்டி அவுலை  உருளைக்கிழங்குடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

ஸ்டெப்:2

பிறகு பொடி பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, கொத்தமல்லி தழை ஆகியவற்றை அவலுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் துருவிய இஞ்சி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா ஆகியவற்றை தேவையான அளவில் அவலுடன் சேர்த்து கொள்ள வேண்டும்.

பின் புளிப்பு சுவைக்காக ஒரு ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து கொள்ள வேண்டும். பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக பிசைய வேண்டும்.

ஸ்டெப்:3

அடுத்து கலந்து வைத்துள்ள கலவையை கட்லெட் போன்று உருண்டை பிடித்து தட்டில் வைத்து கொள்ள வேண்டும்.

பின், ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்றாக சூடானதும் அதில் கட்லெட் போட்டு பொறித்து எடுக்க வேண்டும். கட்லெட் பொன்னிறமாக வரும் வரை பொறிக்க வேண்டும். கட்லெட் பொன்னிறமாக வந்த உடன் அதை எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

அவ்வளவு தான்… இப்பொழுது அனைவருக்கும் பிடித்த மிகவும் ருசியான அவல் உருளைக்கிழங்கு கட்லெட் ரெடி..! 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Food To Boost Child Memory in Tamil

குழந்தைகளுக்கு ஞாபக மறதி நீங்கி ஞாபகசக்தி அதிகரிக்க இதை மட்டும் செய்து கொடுங்கள்..!

அடிக்கிற வெயிலுக்கு வீட்டிலேயே கேரட் ஐஸ் கிரீம் இந்த மாதிரி செஞ்சி சாப்பிட்டு பாருங்க..! டேஸ்ட் வேற லெவல இருக்கும்..!

mutton murtabak recipe in tamil

வாட்டர் பாட்டில் இருந்தால் ருசியான ஜாலர் முர்தபா செய்து பாருங்கள்

Mutton Fry Recipe  

பக்ரீத் ஸ்பெஷல் செட்டிநாடு மட்டன் பொரிச்ச கறி

Homemade Ice Cream Recipe in Tamil

இந்த 2 பொருட்கள் இருந்தால் போதும் வீட்டிலே 4 வகையான ஐஸ்கிரீம் செய்யலாம்..!

பஞ்சாபி லஸ்ஸி செய்வது எப்படி | Sweet Lassi Recipe in Tamil

முருகருக்கு பிடித்த திருப்பாகம் செய்வது எப்படி.?

இதை சாப்பிட்ட ஒரே வாரத்தில் உடலில் உள்ள கொழுப்பு சரசரவென்று குறையும்.!

Tamil Puthandu Special Recipes in Tamil

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் – மாங்காய் பச்சடி, பலாப்பழ பாயாசம் மற்றும் பானகம்