தீபாவளி ஸ்பெஷல் பாதுஷா இப்படி செஞ்சி பாருங்க..!

Badusha Recipe in Tamil

Badusha Recipe in Tamil

வணக்கம் அன்பான நண்பர்களே… இன்றைய சமையல் குறிப்பு பதிவில் ருசியான தீபாவளி ஸ்பெஷல் பாதுஷா செய்வது எப்படி என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். பாதுஷா என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். நாம் பெரும்பாலும் பாதுஷா கடைகளில் வாங்கி தான் சாப்பிட்டு இருக்கிறோம். இனி கடைகளில் வாங்கி சாப்பிட தேவையில்லை. வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் அசத்தலான பாதுஷா செய்து சாப்பிடலாம் வாங்க..!

தீபாவளிக்கு இந்த மாதிரி நெய் மைசூர் பாக் செஞ்சு சாப்பிட்டு பாருங்க..!

பாதுஷா செய்வது எப்படி..? 

பாதுஷா – தேவையான பொருட்கள்: 

  1. மைதா – 2 கப்
  2. பேக்கிங் சோடா – 1/4 ஸ்பூன்
  3. நெய் அல்லது டால்டா – அரை கப்
  4. தண்ணீர் – தேவையான அளவு
  5. சர்க்கரை – 2 கப்
  6. ஏலக்காய் தூள் – தேவையான அளவு
  7. எண்ணெய் – தேவையான அளவு

பாதுஷா செய்முறை: 

செய்முறை -1

ஒரு கிண்ணத்தில் 2 கப் அளவு மைதா மாவு சேர்த்து கொள்ள வேண்டும். பின் அதில் 1/4 ஸ்பூன் அளவில் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

செய்முறை -2

பின் அதில் உருக்கிய நெய் அல்லது டால்டா அரை கப் அளவில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

செய்முறை -3 

பின் அதில் கால் கப் அல்லது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசைந்து எடுத்து கொள்ள வேண்டும்.

பின் அந்த மாவை 30 நிமிடங்கள் வரை மூடி வைக்க வேண்டும்.

செய்முறை -4

பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 2 கப் அளவில் சர்க்கரை சேர்த்து கொள்ள வேண்டும்.

பின் அதில் 1 கப் அளவில் தண்ணீர் சேர்த்து அதனுடன் ஏலக்காய் தூள் சேர்த்து கொள்ள வேண்டும்.

செய்முறை -5

சர்க்கரை பாகு நன்றாக கொதித்து வந்த பின் அடுப்பில் இருந்து இரக்க வேண்டும்.

செய்முறை -6

பின்னர் நாம் பிசைந்து வைத்துள்ள மாவை எடுத்து வடை வடிவத்தில் உருட்டி எடுத்து கொள்ள வேண்டும்.

செய்முறை -7 

பின் ஒரு கடாயில் போதுமான அளவு எண்ணெய் சேர்த்து , எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு நாம் உருட்டி எடுத்து வைத்துள்ள பாதுஷாவை எண்ணெய்யில் போட்டு பொறிக்க வேண்டும்.

பாதுஷா பொன்னிறமாக பொரிந்து வந்த உடன் வெளியில் எடுத்து 5 நிமிடங்கள் ஆறவிட வேண்டும்.

செய்முறை -8

பின் சர்க்கரை பாகுவில் பாதுஷாவை போட்டு 10 நிமிடங்கள் வரை ஊற விட வேண்டும்.

அவ்வளவு தான் நண்பர்களே… அசத்தலான பாதுஷா ரெடி… நீங்களும் உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு சுலபமான முறையில் சுவையான பாதுஷா செய்து கொடுங்கள்..! 

புதிய சுவையில் தீபாவளி ஸ்பெஷல் லட்டு இப்படி செஞ்சி பாருங்க..!

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal