குழந்தைகளின் பேவரைட் வாழைப்பழ தோசை | Banana Dosa Recipe in Tamil

Advertisement

வாழைப்பழ தோசை செய்வது எப்படி? | Banana Dosa in Tamil

Banana Dosa Recipe in Tamil: பொதுவாக வீட்டில் வாழைப்பழம் அதிகமாக இருந்தால் அதை வீணாக்கிவிடுவோம், அதுவும் பொங்கல் பண்டிகையன்று அனைவரது வீட்டிலும் ஒரு வாழைத்தார் முழுதாக இருக்கும். அதை சும்மாக சாப்பிடுவதற்கு பதிலாக குழந்தைகளுக்கு Evening Snacks-ஆக செய்து கொடுங்கள், அதுவும் வாழைப்பழத்தை தோசையாக செய்து பரிமாறுங்கள் வீட்டில் உள்ளவர்கள் வேணும், வேண்டாம் என்று விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க இப்போது எப்படி வாழைப்பழத்தில் தோசை செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் – Banana Dosa Recipe in Tamil:

வாழைப்பழ தோசை

  1. வாழைப்பழம் – தேவையான அளவு
  2. துருவிய வெல்லம் – 1 கப்
  3. துருவிய தேங்காய் – 1/2 கப்
  4. ஏலக்காய் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
  5. முந்திரி பருப்பு – 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
  6. பேக்கிங் பவுடர் – 1/2 டேபிள் ஸ்பூன்
  7. கோதுமை மாவு – 1 கப்
  8. பால் – 1/2 கப்
  9. நெய் – தேவையான அளவு
  10. உப்பு – தேவையான அளவு

செய்முறை: – Banana Dosa Recipe in Tamil

ஸ்டேப்: 1 – வாழைப்பழ தோசை:

முதலில் பழுத்த வாழைப்பழம் தேவையான அளவு எடுத்து அதன் தோலை உரித்து விட்டு சிறியதாக நறுக்கி கொள்ளவும். அதில் 1 கப் துருவிய தேங்காய் சேர்த்து கொள்ளவும்.

ஸ்டேப்: 2 – Banana Dosa in Tamil:

பின் அதில் 1 கப் துருவிய வெல்லம், 1/2 டேபிள் ஸ்பூன் ஏலக்காய் தூள், 1 டேபிள் ஸ்பூன் நறுக்கிய முந்திரி பருப்பு, 1/2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும்.

ஸ்டேப்: 3 – வாழைப்பழ தோசை:

Banana Dosa in Tamil: அதன் பிறகு அதில் 1 டேபிள் ஸ்பூன் உப்பு மற்றும் அரை கப் கோதுமை மாவு சேர்த்து நன்றாக கலக்கவும். மாவு தளர்வடைவதற்காக அதில் 1/2 கப் பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மிக்ஸ் பண்ணவும். பின்னர் மீண்டும் அதில் அரை கப் கோதுமை மாவு சேர்த்து மாவு பதத்திற்கு வரும் வரை நன்றாக கலக்கவும்.

ஸ்டேப்: 4 – Banana Dosa in Tamil

மாவு கட்டியாக இருந்தால் இன்னும் கொஞ்சம் பால் சேர்த்து மிக்ஸ் பண்ணி கொள்ளலாம். மாவு பதத்திற்கு வந்தவுடன் பத்து நிமிடம் அதை அப்படியே வைத்திருக்கவும்.

ஸ்டேப்: 5 – வாழைப்பழ தோசை:

பின்னர் தோசை கல்லில் நெய் தடவி கொள்ளவும், தோசைக்கல் சூடான பிறகு வாழைப்பழ மாவை எடுத்து சிறிய சிறிய தோசையாக ஊற்றவும். தோசையின் அடிப்பாகத்தை திருப்புவதற்கு முன்னர் அதன் மேல் பகுதியில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றவும்.

ஸ்டேப்: 6 – Banana Dosa in Tamil:

தோசையின் அடிப்பாகம் கோல்டன் பிரவுன் கலர் வந்தவுடன் தோசையை திருப்பவும். அடுப்பை மீடியம் flame-ல் வைத்து வேக வைக்கவும். இரண்டு பக்கமும் கோல்டன் பிரவுன் கலர் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடலாம். இப்பொழுது சுட சுட சுவையான வாழைப்பழ தோசை தயார்.

நாவில் கரையும் வாழைப்பழ அல்வா செய்முறை

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal
Advertisement