பாசுந்தி செய்வது எப்படி? | Easy Basundi Recipes in Tamil
சாப்பாடு என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் இனிப்பு வகை என்றால் சொல்லவே வேண்டாம் எல்லோருக்கும் பிடிக்கும். காரம் சாப்பிடாதவர்கள் கூட இருப்பார்கள், ஆனால் இனிப்பு பிடிக்காமல் ஒருவர் கூட இருக்கமாட்டார்கள். அந்த வகையில் எல்லோருக்கும் பிடித்த ஒரு இனிப்பான ரெசிபியை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம், அப்படி என்ன ரெசிபி என்று தானே யோசிக்கிறீர்கள், அதான் குட்டிஸ்களுக்கு ரொம்ப பிடித்த பாசுந்தி எப்படி செய்யலாம் என்று பார்க்காலம் வாங்க.
தேவையான பொருட்கள் – பாசுந்தி செய்வது எப்படி:
- பால் – 1 லிட்டர்
- குங்குமப்பூ – சிறிதளவு
- ஏலக்காய் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
- சர்க்கரை – அரை கப்
- பாதாம் – 2 (நறுக்கியது)
- பிஸ்தா – 2 (நறுக்கியது)
செய்முறை:
ஸ்டேப்: 1
Basundi Recipe in Tamil: முதலில் ஒரு பாத்திரத்தில் 1 லிட்டர் பாலை ஊற்றி கொதிக்க விடவும். பாலை அடிபிடிக்காதவாறு கிண்டி விடவும். 1 லிட்டர் பால் பாதியாக வரும் வரை கொதிக்க விடவும்.
ஸ்டேப்: 2
அதன் பின் குங்குமப்பூ பால் செய்வதற்கு ஒரு பௌலில் சிறிதளவு காய்ச்சிய பால் எடுத்துக்கொள்ளவும் அதில் சிறிதளவு குங்குமப்பூ சேர்க்கவும். குங்குமப்பூ சேர்த்தவுடன் பாலின் நிறம் மாறும்.
ஸ்டேப்: 3
Basundi Recipe in Tamil: பின்னர் பால் நன்றாக கொதித்த உடன் குங்குமப்பூ சேர்த்து வைத்த பாலை அதில் ஊற்றவும். அதன் பிறகு அதில் 1/2 டேபிள் ஸ்பூன் ஏலக்காய் தூள், அரை கப் சர்க்கரை சேர்த்து மீடியம் Flame-ல் வைத்து கிளறி விடவும்.
ஸ்டேப்: 4
Easy Milk Recipes in Tamil: பால் கொதிக்கும் போதே அதில் நறுக்கிய பாதாம் 2, நறுக்கிய பிஸ்தா 2 சேர்த்து அடுப்பை அணைத்து விடலாம். இப்பொழுது பாசுந்தியை பிரிட்ஜில் 2 மணி நேரம் வைக்கவும். 2 மணி நேரம் கழித்து பார்த்தால் குளிர்ச்சியான, சுவையான பாசுந்தி தயார்.
ருசியான சந்திரகலா ஸ்வீட் செய்வது எப்படி? |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal kurippu tamil |