வீட்டில் பீட்ரூட் ,சேமியா இருக்கா..? அப்போ இதை செய்து பாருங்கள்..!

Advertisement

Beetroot Payasam in Tamil | பீட்ரூட் பாயசம் செய்வது எப்படி..? 

அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே..! இன்றைய சமையல் குறிப்பு பதிவில் மிகவும் சுவையான மற்றும் மிகவும் அருமையான பீட்ரூட் சேமியா பாயசம் செய்வது எப்படி..? என்பதை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். நாம் பொதுவாக பீட்ரூட்டை வைத்து பொரியல், ஜூஸ் மற்றும் அல்வா போன்றவை தான் செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால் பீட்ரூட் வைத்து பாயசம் செய்து சாப்பிட்டிருக்க மாட்டோம். அதனால் இந்த பதிவில் பீட்ரூட் பாயசம் செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம்.

பீட்ரூட்டில் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளது. ஆனால், சிறு குழந்தைகள் இதனை சாப்பிட மாட்டார்கள். எனவே, அப்படி Beetroot சாப்பிடாமல் இருக்கும் குழந்தைகளுக்கு இதுபோன்று பீட்ரூட் பாயசம் செய்து கொடுங்கள். விரும்பி சாப்பிடுவார்கள்.

பீட்ரூட் சேமியா பாயசம் செய்வது எப்படி..?

beetroot payasam in tamil

முதலில் இந்த பாயசம் செய்வதற்கு தேவையான பொருட்களை பற்றி காணலாம்.

  1. பீட்ரூட் – 2
  2. சேமியா – 2 கப் 
  3. பால் – 2 1/2 கப் 
  4. சர்க்கரை – 2 கப் 
  5. முந்திரி – 10
  6. பாதாம் – 10 
  7. பிஸ்தா – 10
  8. உலர்திராட்சை – 10
  9. ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன்
  10. நெய் – 4 டேபிள் ஸ்பூன் 
  11. உப்பு – 1 சிட்டிகை 

செய்முறை :

ஸ்டேப் – 1

முதலில் நாம் எடுத்து வைத்திருக்கும் 2 பீட்ரூட்டையும் அதனுடைய தோல்களை நீக்கிவிட்டு நன்கு சுத்தம் செய்துவிட்டு பின்னர் அதனை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து  சிறிதளவு தண்ணீரை ஊற்றி நன்கு அரைத்து அதில் உள்ள தண்ணீரை மட்டும் வடிக்கட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 2

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி அதில் நாம் எடுத்து வைத்திருந்த 2 கப் சேமியாவை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 3

சேமியா நன்கு வறுபட்ட பிறகு அதில் நாம் அரைத்து வடிக்கட்டி வைத்திருந்த பீட்ரூட் ஜூஸை ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள். பின்னர் அதில் 2 1/2 கப் பால், 2 கப் சர்க்கரை, 1 சிட்டிகை உப்பு, 1 டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

ஸ்டேப் – 4 

அவையெல்லாம் கொதித்து கொண்டிருக்கும் நேரத்தில் மற்றொரு அடுப்பை பற்ற வைத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி அதில் நாம் எடுத்து வைத்திருக்கும் 10 முந்திரி, 10 பாதாம், 10 பிஸ்தா மற்றும் 10 உலர்திராட்சை ஆகியவற்றை இரண்டும் மூன்றுமாக உடைத்து போட்டு நன்கு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 5

beetroot kheer in tamil

இவையெல்லாம் நன்கு வறுப்பட்ட பிறகு  கொதித்து கொண்டிருக்கும் பாயாசத்தில் சேர்த்து  அடுப்பிலிருந்து இறக்கி அனைவருக்கும் பரிமாறிவிடுங்கள்.

இப்பொழுது நமது பீட்ரூட் பாயாசம் ரெடி வாங்க சுவைக்கலாம். இந்த பீட்ரூட் பாயாசத்தை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து சுவைத்து பாருங்கள்.

இதையும் படியுங்கள் => பீட்ரூட் இருக்கிறதா? உடனே இந்த பீட்ரூட் அல்வா செய்து பாருங்கள்..! 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்

 

Advertisement