பிரட் சில்லி செய்வது எப்படி | Bread Chilli Recipe in Tamil

Advertisement

பிரட் சில்லி ரெசிபி | Bread Chilli in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைக்கு நம் காண இருப்பது பிரட் சில்லி செய்வது எப்படி என்பதுதான் பார்க்கபோகிறோம். தினம் தினம் ஒரே மாதிரியான சாப்பாட்டை சாப்பிட்டு பழகி போகிவிட்டது. இந்த மாதிரியான ரெசிபியையும் செய்து சாப்பிட்டு பார்ப்போம் வாங்க. இதை செய்வது கஷ்டம் கிடையாது. அதை மிகவும் சுலபமான முறையில் உங்களுக்காக பொதுநலம்.காம் தெளிவாகவும் சுலபமாகவும் சொல்லியிருக்கிறது.

இட்லி மாவில் வடை சுடுவது எப்படி

தேவையான பொருட்கள்:

  1. பிரட் -6 பிஸ்
  2. எண்ணெய் -1/4 லிட்டர்
  3. இஞ்சி – 3 துண்டுகள்
  4. பூண்டு – 2 துண்டுகள்
  5. வெங்காயம் – 2
  6. தக்காளி – 2
  7. குடமிளகாய் – 1
  8. மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
  9. கரம்மசாலா – சிறிதளவு
  10. ரெட் சில்லி சாஸ் – 1 ஸ்பூன்
  11. சோயா சாஸ் -1 ஸ்பூன்
  12. உப்பு – தேவையான அளவு 
  13. கொத்தமல்லி சிறிதளவு

செய்முறை:

ஸ்டப் -1:

  • 6 பிரட்களை சிரியதுண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும், இஞ்சி பூண்டுகளை நசுக்கி வைத்துகொள்ளுகள், வெங்காயம் தக்காளி குடைமிளகாய் இவை அனைத்தையும் நறுக்கிக்கொள்ளவும்.
வெஜிடபிள் கோப்தா கிரேவி

 

ஸ்டப் -2:

  • வானொலியில் சிறிது எண்ணெய் ஊற்றி நறுக்கிவைத்த பிரட் துடுகளை வாட்டி எடுத்துவைத்துக்கொள்ளவும்.

ஸ்டப் -3:

  • பின்பு அதே வானொலியில் சிறிது எண்ணெய் ஊற்றி நசுக்கி வைத்த இஞ்சி பூண்டை அதில் போட்டு வதக்கவும்.

ஸ்டப் -4:

  • அதன் பின் இஞ்சி பூண்டு வதங்கியதும் அதேனுடன் வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும். பிறகு வெங்காயம் வதங்கியதும் தக்காளி குடைமிளகாய் போட்டு வதக்கவும். இவை சீக்கிரமாக வதங்க சிறிது உப்பு சேர்த்து வதக்குகள்.
செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை செய்முறை விளக்கம்

 

ஸ்டப்- 5:

  • அனைத்தும் வதங்கிய பின் அதேனுடன் மிளகாய் தூள் 1/2 ஸ்பூன், கரம்மசாலா சிறிதளவு ஆகியவற்றை போட்டு அதென் பச்சை தன்மை போகும் வரை வதக்கவும். பின்பு ரெட் சில்லி சாஸ்1 ஸ்பூன், சோயா சாஸ்1 ஸ்பூன் போட்டு வதக்கவும் முன்பு சிறிதளவு உப்பு சேர்த்துக்கொள்வதால் இப்பொழுது சிறிது உப்பு போட்டு நன்கு கொதிக்க விடவும்.

ஸ்டப் -6:

  • அந்த மசாலா கொதித்த பின் அதனுடன் வாட்டி எடுத்துவைத்த பிரட்டை போட்டு நன்கு கலந்து விடவும். கலந்த பின் கொஞ்சம் கொத்தமல்லிதலை சேர்த்து இறக்கவும் இப்பொழுது சுவையான பிரட் சில்லி ரெடி.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>  சமையல் குறிப்புகள்
Advertisement