பட்டர் ஸ்காட்ச் ஐஸ் கிரீம் செய்வது எப்படி ? Butterscotch Ice Cream Recipe In Tamil..!

Advertisement

பட்டர் ஸ்காட்ச் ஐஸ் கிரீம் செய்வது எப்படி ? Butterscotch Ice Cream Recipe In Tamil..!

ஹாய் ஃப்ரண்ட்ஸ்..! இன்றைய பொதுநலம் பதிவில் அனைவருக்கும் பிடித்தமான ஒரு ரெசிபி பார்க்கப்போறோம். அது என்ன ரெசிபின்னு பாத்தோம்னா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் பட்டர் ஸ்காட்ச் ஐஸ் கிரீம்(Butterscotch Icecream Cake Recipe) வீட்டிலே எப்படி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க..!

newகோதுமை மாவில் பத்தே நிமிடத்தில் சுவையான ஸ்வீட் செய்முறை..! Sweet Recipes in Tamil ..! Wheat Flour Snacks Recipes..!

பட்டர் ஸ்காட்ச் ஐஸ் கிரீம் செய்ய தேவையான பொருட்கள்:

  1. பால் – 1 கப் (தனியாக சிறிதளவு பால் எடுத்துக்கொள்ள வேண்டும்)
  2. கான் ஃப்ளவர் மாவு – 1 ஸ்பூன் 
  3. சர்க்கரை – 1/4 கப் அளவு 
  4. பட்டர் – 2 ஸ்பூன் 
  5. நறுக்கிய முந்திரி பருப்பு – 1/4 கப் 
  6. அமுல் பிரெஷ் கிரீம் – 200 ml 
  7. எல்லோ புட் கலர் – சிறிதளவு 

பட்டர் ஸ்காட்ச் ஐஸ் கிரீம் செய்முறை விளக்கம் 1:

Butterscotch Ice Cream: முதலில் கடாயில் 1 கப் அளவிற்கு பால் எடுத்து நன்றாக கொதிக்க வைத்துக்கொள்ளவும். 1 கப் அளவு பாலில் சிறிதளவு தனியாக பாலை எடுத்துவைத்து கொள்ளவும்.

பால் நன்றாக கொதிக்கும் போதே தனியாக எடுத்துவைத்த பாலில் கான் ஃப்ளவர் மாவு 1 ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ளவும்.

பட்டர் ஸ்காட்ச் ஐஸ் கிரீம் செய்முறை விளக்கம் 2:

Butterscotch Ice Cream: நன்றாக கலந்தபிறகு கடாயில் இருக்கும் பாலில் கான் ஃப்ளவர் மாவு சேர்த்த பாலை இதனுடன் சேர்த்து நன்றாக 2 நிமிடம் கொதிக்க விடவேண்டும்.

இப்போது கடாயில் இருந்து பாலை இறக்கிக்கொள்ளலாம். அடுத்து தனியாக ஒரு கடாயில் சர்க்கரை 1/4 கப் அளவு எடுத்துக்கொள்ளவும்.

சர்க்கரையை மிதமான சூட்டில் வைத்து தண்ணீர் எதுவும் சேர்க்காமல் கிளறிவிட வேண்டும்.

சர்க்கரை நன்றாக பழுப்பு நிறத்தில் வரும்வரை மிதமான சூட்டில் வைத்து கிளற வேண்டும்.

பட்டர் ஸ்காட்ச் ஐஸ் கிரீம் செய்முறை விளக்கம் 3:

Butterscotch Ice Cream: சர்க்கரை பழுப்பு நிறத்தில் வந்ததும் பட்டர் 2 ஸ்பூன் அளவிற்கு எடுத்து சர்க்கரையில் சேர்த்து நன்றாக கிளறவேண்டும்.

தனியாக ஒரு பிலேட்டில் நெய் சிறிதளவு தடவி வைத்துக்கொள்ளவும்.

நன்றாக கலந்த பிறகு நறுக்கிய முந்திரி பருப்பு 1/4 கப்  சேர்த்துக்கொள்ளவும். அடுத்து நெய் தடவிய தட்டில் கலந்துவைத்த கலவையை தட்டில் கொட்டவும்.

பட்டர் ஸ்காட்ச் ஐஸ் கிரீம் செய்முறை விளக்கம் 4:

Butterscotch Ice Cream: தட்டில் கொட்டியபிறகு நன்றாக ஆறவிடவும். நன்றாக ஆரிய பின் படலாக வரும். அப்போது தோசை கரண்டியால் எடுத்துக்கலாம்.

அதன்பிறகு பட்டர் ஷீட்டால் செய்துவைத்துள்ள படலை நன்றாக நுணுக்கி கொள்ளவும்.

அடுத்து ஒரு பவுலில் அமுல் பிரெஷ் கிரீம் 200 ml எடுத்துக்கொள்ளவும்.

பட்டர் ஸ்காட்ச் ஐஸ் கிரீம் செய்முறை விளக்கம் 5:

Butterscotch Ice Cream: அடுத்து அமுல் பிரெஷ் கிரீமை Hand Beater-ஆல்  நன்றாக கலந்து கொள்ளுங்கள். அடுத்து நன்றாக கெட்டியான பதத்திற்கு வரும் வரை செய்துகொள்ளவும்.

இதனுடன் 1/2 கப் சர்க்கரையை பொடி செய்து சேர்த்துக்கொள்ளவும். சேர்த்த பிறகு Hand Beater-ஆல் நன்றாக கலந்து கொள்ளவும்.

நாம் ரெடி பண்ண கான் ஃப்ளவர் மாவு பாலை இதனுடன் சேர்க்க வேண்டும்.

பட்டர் ஸ்காட்ச் ஐஸ் கிரீம் செய்முறை விளக்கம் 6:

Butterscotch Icecream Recipe: கான் ஃப்ளவர் மாவு பாலை Hand Beater-ஆல் 1 நிமிடம் கலந்துக்கொள்ள வேண்டும். இதனுடன் எல்லோ புட் கலர் சிறிதளவு சேர்த்துக்கொள்ளவும்.

அடுத்து நுணுக்கி வைத்துள்ள கேரமலை(Caramel) சிறிதளவு தனியாக எடுத்துவைத்து விட்டு மீதமுள்ளதை பாலில் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும்.

இப்பொது செய்துவைத்த ஐஸ் கிரீம் மிக்ஸை கரண்டியால் கலந்துக்கொள்ளவும்.

பட்டர் ஸ்காட்ச் ஐஸ் கிரீம் செய்முறை விளக்கம் 7:

Butterscotch Icecream Recipe: கலந்து வைத்ததை ஒரு பவுலில் ஊற்றிக் கொண்ட பிறகு மூடி போட்ட பின் 8 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவேண்டும்.

அவ்ளோதாங்க ஐஸ் கிரீம் ரெடி. இதை ஐஸ்கிரீம் ஸ்கூப் வெச்சிகூட எடுக்கலாம். அது இல்லாதவர்கள் வீட்டில் உள்ள குழி கரண்டி கூட பயன்படுத்தலாம்.

பட்டர் ஸ்காட்ச் ஐஸ் கிரீம் செய்முறை விளக்கம் 8:

Butterscotch Ice Cream: அடுத்ததாக கரண்டியால் எடுத்துவைத்த பிறகு சிறிதளவு எடுத்துவைத்துள்ள கேரமலை ஐஸ்கிரீம் மேல் வைக்கவும். பார்ப்பதற்கு ரொம்பவே அழகாய் இருக்கும்.

அவ்ளோதா இந்த பட்டர் ஸ்காட்ச் ஐஸ் கிரீம் ரெடிங்க. இத எல்லாரும் வீட்ல கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.

நன்றி வணக்கம்🙏🙏🙏

newஆரோக்கியமான கம்பு வெஜிடபிள் கஞ்சி செய்யலாம் வாங்க !!! (gramiya samayal)
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement