சுவையான சாக்லேட் கேக் செய்வது எப்படி? Cake recipe without oven in tamil

Advertisement

சாக்லேட் கேக் செய்வது எப்படி தமிழ் | Cake recipe without oven in tamil

How to make eggless chocolate cake without oven:- கேக் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். எனவே இந்த பதிவில் அனைவருக்கும் மிகவும் பிடித்த சாக்லேட் கேக் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்வோம். கேக் என்றால் அதற்கு ஓவன் தேவைப்படும் என்று நினைப்பீர்கள். இந்த சாக்லேட் கேக் செய்வதற்கு மைக்ரோ ஓவன் தேவைப்படாது வெறும் கேஸ் அடுப்பில் குக்கரை பயன்படுத்தி தான் சாக்லேட் கேக் செய்ய போகின்றோம். சரி வாங்க சாக்லேட் கேக் செய்வது எப்படி? இதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

newஅடுப்பில் கேக் செய்வது எப்படி? தெளிவான செய்முறை விளக்கம்..

சாக்லேட் கேக் செய்வது எப்படி – தேவையான பொருட்கள்:-

  1. மைதா – ஒரு கப்
  2. கோகோ பவுடர் – 1/2 கப்
  3. பேக்கிங் பவுடர் – 1 ஸ்பூன்
  4. பேக்கிங் சோடா – 1/2 ஸ்பூன்
  5. உப்பு – 1/2 ஸ்பூன்
  6. சர்க்கரை – 1 கப்
  7. பால் – 3/4 கப்
  8. தயிர் – 1/2 கப்
  9. ஆயில் – 1/4 கப்
  10. வெண்ணிலா எசன்ஸ் – 1 ஸ்பூன்
  11. உப்பு – ஒரு கப்

சாக்லேட் கேக் செய்முறை / How to make eggless chocolate cake without oven:

ஸ்டேப்: 1

முதலில் குக்கரை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் ஒரு கப் உப்பை பரவலாக கொட்டிவிட வேண்டும்.

பின் அதன் மேல் ஒரு சிறிய ஷ்டாண்ட் வைத்து குக்கரை மூடி வெயிட் வைக்காமல் 15 நிமிடங்கள் குக்கரை மிதமான சூட்டில் சூடேற்ற வேண்டும்.

ஸ்டேப்: 2

அதற்குள் நாம் சாக்லேட் கேக் செய்வதற்கு மாவு தயார் செய்துவிடலாம். ஒரு சுத்தமான பவுல் ஒன்றை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் ஒரு கப் மைதா மாவு, கோகோ பவுடர் 1/2 கப், பேக்கிங் பவுடர் 1 ஸ்பூன், பேக்கிங் சோடா 1/2 ஸ்பூன், உப்பு 1/2 ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக சலித்து எடுத்து கொள்ளுங்கள்.

பின் அவற்றில் ஒரு கப் சர்க்கரையை சேர்த்து கிளறிவிடுங்கள்.

ஸ்டேப்: 3

பிறகு 3/4 கப் பால், 1/2 கப் தயிர், ஆயில் 1/4 கப், வெண்ணிலா எசன்ஸ் 1 ஸ்பூன் சேர்த்து கட்டிகள் இல்லாதவாறு நன்றாக கிளறி கொள்ளுங்கள். இப்பொழுது கேக் மாவு தயாராகிவிட்டது.

இப்பொழுது ஒரு கேக் டின் ஒன்றை எடுத்து கொள்ளுங்கள். அவற்றில் சிறிதளவு நெய் தடவி கலந்து வைத்துள்ள கேக் மாவை இடைவெளி இல்லாமல் ஊற்றி கொள்ளுங்கள்.

ஸ்டேப்:  4

அடுப்பில் வைத்திருக்கும் குக்கர் 15 நிமிடங்கள் சூடேறிய பின் குக்கரின் மூடியை திறந்து பத்திரமாக கேக் டின்னை குக்கரின் உள்ளே வைத்திருக்கும் கேக் ஷ்டாண்டின் மேல் வைத்து குக்கரை திரும்பவும் மூடி குக்கரின் வெயிட் சேர்க்காமல் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து 40 முதல் 45 நிமிடங்கள் வரை கேக்கை வேகவைக்க வேண்டும்.

ஸ்டேப்: 5

45 நிமிடங்கள் கழித்து குக்கரை திறந்து கேக் வெந்துவிட்டதா என்பதை ஒரு முறை சோதித்து பார்க்கவும். அதற்கு ஒரு குச்சியை கேக்கின் உள் விட்டு எடுங்கள் கேக் குச்சியில் ஒட்டாமல் இருந்தால் கேக் நன்றாக வெந்துவிட்டது என்று அர்த்தம் அதுவே, கேக் குச்சியில் ஒட்டியிருந்தால் திரும்பவும் சிறிது நேரம் வேகவைக்கவும்.

மேல் கூறப்பட்டுள்ள செய்முறை விளக்கம் (Cake recipe without oven in tamil) படி சாக்லேட் கேக் செய்து பாருங்கள் மிகவும் சாப்பிடவும் சுவையாகவும். இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

newபிளம் கேக் செய்வது எப்படி?

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement