வீட்டிலேயே சைவ சிலோன் பரோட்டா செய்வது எப்படி?

Ceylon Parotta Recipe in Tamil

நண்பர்களே வணக்கம்..! பரோட்டா என்பது அனைவருக்கும் பிடிக்கும் அதேபோல் நீங்கள்  சிலோன் பரோட்டா சாப்பிட்டு இருக்கீர்களா? அது எப்படி அவ்வளவு சுவையாக இருக்கும். அதனை வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை பற்றி தான் இன்று பார்க்க போகிறோம்.

பொதுவாக பரோட்டா செய்வது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும் அதனாலே அதை வீட்டில் செய்ய யாரும் விரும்பவே மாட்டார்கள். இனி கவலை வேண்டாம் வீட்டில் சுலபமான முறையில் எப்படி சிலோன் பரோட்டா செய்வது என்பதை பார்ப்போம் வாங்க..!

தேவையான பொருட்கள்:

  • மைதா – 250 கிராம்
  • சர்க்கரை – 2 டீஸ்பூன்
  • பால் – 1/4 கப்
  • எண்ணெய் –1/4 லிட்டர்
  • உப்பு – தேவையான அளவு

ஸ்டேப்: 1

முதலில் மைதா – 250 கிராம் எடுத்துக்கொள்ளவும் அதனுடன் சர்க்கரை – 2 டீஸ்பூன், பால் – 1/4 கப், உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளவும்.

ஸ்டேப்: 2

எந்த பதத்திற்கு பிசைந்துகொள்ளுகிறோர்களோ அந்த அளவுவுக்கு பரோட்டா மிருதுவாக இருக்கும்.

இனி பரோட்டா செய்ய மாவு பிசைய வேண்டாம்.. இந்த ட்ரிக்கை ட்ரை பண்ணுங்க

ஸ்டேப்: 3

பிசைந்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றிக்கொண்டு அதன் மீது 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொள்ளவும். அதன் பின் அதனை நன்கு கலந்துகொள்ளவும்.

ஸ்டேப்: 4

பின்பு மறுமுறையும் அதன் மீது எண்ணெய் சேர்த்து மூடி வைக்கவும். குறைந்தது 1 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரம் வரை ஊறவைக்கவும்.

ஸ்டேப்: 5

இப்படி ஊறவைப்பதால் விரிப்பதற்கு மிகவும் சுலபமானாகவே இருக்கும். ஆகையால் 4 மணி நேரத்திற்கு பிறகு மாவை 5 உருண்டையாக உருட்டிக்கொள்ளவும். அதனை ஒரு 1/2 மணி நேரம் வரை ஊறவைக்கவும்.

ஸ்டேப்: 6

 சிலோன் பரோட்டா

 

பின்பு மாவை தரையில் வைத்து மேல் கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளதை போல் விரித்துக்கொள்ளவும். மிகவும் நைசாக விரித்துக்கொள்ளவும்.

ஸ்டேப்: 7

விரித்த பின் அதன் மேல் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றிக்கொண்டு அதனை மாவின் மீது தடவிக்கொள்ளவும்.

ஸ்டேப்: 8

 ceylon parotta recipe in tamil

கடைசியாக விரித்த மாவை ஒரு பக்கம் மட்டும் இழுத்து அந்த மாவின் மீது போடவும், அதேபோல் மறுபக்கமும் அதேபோல் போடவும். மேல் கொடுக்கப்பட்ட படத்தில் உள்ளதை போல் செய்யவும்.

ஸ்டேப்: 9

படத்தில் உள்ளதை போல் செய்து ஒவ்வொன்றாக தோசைக்கல்லில் போட்டு எடுக்கவும். அவ்வளவு தான் சிலோன் பரோட்டா ரெடி.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 ஹோட்டல் சுவையில் பரோட்டா இனி வீட்டிலேயே செய்யலாம்

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal kurippu tamil