சுகர் பிரச்சனை உள்ளவர்களுக்கு உகந்த பிஸ்கட் செய்யலாம் வாங்க..

Advertisement

சப்பாத்தி பிஸ்கட்

சுகர் பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த பிஸ்கட் செய்து கொடுங்கள். சுகர் பிரச்சனை உள்ளவர்கள் பிஸ்கட் சாப்பிட மாட்டார்கள். அப்படியே சாப்பிட்டாலும் சுகர் இல்லாத பிஸ்கட் தான் வாங்கி சாப்பிடுவார்கள். வீட்டில் சப்பாத்தி மீதம் இருந்தால் மறுபடியும் சூடு செய்து சாப்பிடுவார்கள். இது மாதிரி சாப்பிடுவதால் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இனி கவலை வேண்டாம். மீதம் இருந்த சப்பாத்தியை வைத்து சூப்பரா பிஸ்கட் செய்யலாம் வாங்க..

இதையும் படியுங்கள் ⇒ 1 கப் கோதுமை மாவில் Soft- ஆன பிஸ்கட் செய்முறை..!

பிஸ்கட் செய்ய தேவையான பொருட்கள்:

  • சப்பாத்தி – நான்கு
  • பால் – 1 1/2 கப்
  • சர்க்கரை – 1/4 கப்
  • தேங்காய் துருவல் – 1/4 கப்
  • ஏலக்காய் – 1/2 தேக்கரண்டி
  • நெய் – 1 தேக்கரண்டி
  • சமையல் எண்ணெய் – தேவையான அளவு

சப்பாத்தி பிஸ்கட் செய்முறை:

ஸ்டேப்: 1

முதலில் 4 சப்பாத்திகளை எடுத்து கொள்ளுங்கள். சப்பாத்தியை சிறியதாக நறுக்கி கொள்ளுங்கள். பின்னர் மிக்சியில் நறுக்கி வைத்த சப்பாத்தியை போட்டு அரைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 2

அடுப்பை பற்ற வையுங்கள். அதில் ஒரு கடாயை வைக்க வேண்டும். அதில் 1 1/2 கப் பால் ஊற்றவும். பால் கொதித்ததும் 1/4 கப் சர்க்கரையை சேர்க்கவும்.

ஸ்டேப்: 3

சர்க்கரை கரைந்ததும் அரைத்து வைத்த சப்பாத்தியை சேர்க்கவும். அடிபிடிக்காமல் கலந்து விடவும். பின் 1/4 கப் தேங்காய் துருவல் சேர்த்து கலந்து விடவும்.

ஸ்டேப்: 4

பின் அடுப்பை அணைத்து விட வேண்டும். பிஸ்கட் கலவையை மற்றொரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். ஆறியதும் ஏலக்காய் தூள், நெய் சேர்த்து கலந்து விடவும்.

ஸ்டேப்: 5

ஆறியதும் கெட்டியான பதத்திற்கு வந்திருக்கும். இப்பொழுது உங்களுக்கு விருப்பட்ட வடிவில் நறுக்கி கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 6

பின் அடுப்பை பற்ற வையுங்கள். பாத்திரத்தை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்ததும் நறுக்கி வைத்த பிஸ்கட்டை போட்டு எடுங்கள். இரு பக்கமும் பிரட்டி எடுங்கள்.

ஸ்டேப்: 7

அவ்வளவு தாங்க சூப்பரான சப்பாத்தி பிஸ்கட் தயார். ருசிக்கலாம் வாங்க.. இந்த பிஸ்கட்டை மூன்று நாட்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement