எளிமையாக எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு வைப்பது எப்படி.? | How to Make Oil Brinjal Kulambu in Tamil
நாம் இன்றைய சமையல் குறிப்பு பகுதியில் எளிமையான முறையில் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு எப்படி வைப்பது என்று பார்க்கப்போகிறோம். பெரும்பாலான வீட்டில் வாரத்தில் ஒரு நாள் மட்டும் தான் அசைவம் இருக்கும் மற்ற நாட்களில் சைவம் தான். அதிலும் தினமும் சாம்பார், புளிக்குழம்பு இதுமாதிரிதான் வைப்பார்கள். தினமும் வித்தியாசமாகவும், சளிக்காமலும் வைக்கணும் என்று யோசிப்போம் அல்லவா.! அப்படி யோசிக்கும் போது வீட்டில் காய்கறிகளே இல்லையா கத்தரிக்காய் மட்டும்தான் இருக்கா வாங்க கத்தரிக்காயை வைத்து எளிமையாகவும் ருசியாகவும் சமைப்பது எப்படி என்று பார்ப்போம்.! இப்படி சமைத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.
Chettinad Ennai Kathirikai Kulambu:
தேவையான பொருட்கள்:
- கத்தரிக்காய் -08
- சின்ன வெங்காயம் -20
- தக்காளி -02
- திருகிய தேங்காய் -சிறிதளவு
- சோம்பு -1தேக்கரண்டி
- சீரகம் -1 தேக்கரண்டி
- மிளகு -சிறிதளவு
- பூண்டு -6
- கடுகு தாலிபுக்கு -தேவையான அளவு
- வெந்தயம் தாலிபுக்கு -தேவையான அளவு
- புளி கரைசல் -1/2 கப்
- நல்லெண்ணெய் -5 தேக்கரண்டி
- உப்பு -தேவையான அளவு
- மிளகாய் தூள் -தேவையான அளவு
- மல்லித்தூள் -தேவையான அளவு
- மஞ்சள்தூள் -சிறிதளவு
செய்முறை:
ஸ்டேப்: 1
- முதலில் கடாயில் வதக்குவதற்கு தேவையான அளவு நல்லலெண்ணெய் ஊற்ற வேண்டும்.
- எண்ணெய் சூடானதும் 1/2 ஸ்பூன் மிளகு, 1/2 ஸ்பூன் சீரகம், 10 நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். அதனோடு 5 பல் பூண்டு, 1 தக்காளி, சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதனோடு 4 ஸ்பூன் திருகிய தேங்காய் சேர்த்து வதக்கவும்.
- வதக்கிய பொருட்கள் எல்லாம் சிறிது நேரம் ஆறவிடுங்கள். பிறகு மிக்ஸியில் போட்டு பேஸ்ட்டாக அரைத்து கொள்ள வேண்டும்.
ஸ்டேப்: 2
- மற்றறொரு கடாயில் 5 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி 8 கத்தரிக்காயும் சேர்த்து வதக்கவும். கத்திரிக்காய் தோல் சுருங்கும் வரை நன்றாக வதக்கவும்.
- வதக்கிய கத்திரிக்காயை தனியாக எடுத்து வைக்கவும்.
ஸ்டேப்: 3
- கடாயில் 5 ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்ற வேண்டும். அதில் 1/2 ஸ்பூன் கடுகு, 1/2 ஸ்பூன் சீரகம், 1/4 ஸ்பூன் வெந்தயம், மிளகு சிறிதளவு, ஒரு கையளவு கறிவேப்பிலை சேர்த்து லைட்டா வதக்க வேண்டும்.
- அதன்பின் 10 சின்ன வெங்காயம், 5 பல் பூண்டு சேர்த்து கலர் மாறும்வரை வதக்க வேண்டும்.
- வதக்கிய பிறகு 1 நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
ஸ்டேப்: 4
- அதற்கு பின் தேவையான அளவு உப்பு, 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், காரத்துக்கேற்ற மிளகாய்த்தூள், 1 ஸ்பூன் மல்லித்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
ஸ்டேப்: 5
- பின் அதனோடு அரைத்து வைத்த பேஸ்ட்டையும் சேர்த்து வதக்க வேண்டும். வதக்கிய பிறகு கொஞ்சம் தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும்.
- பின் கொதி வந்தவுடன் புளி கரைசலையும் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
ஸ்டேப்: 6
- அதற்கு பின் கொதித்த பிறகு வதக்கி வைத்த கத்திரிக்கையையும் சேர்த்து மூடி வைத்து 15 நிமிடம் கொதிக்க விடுங்கள் எண்ணெய் பிரிந்த நிலை வந்தவுடன் அடுப்பை அணைத்து விட வேண்டும்.
- இப்போது ருசியான செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு தயார்.
புளி குழம்பு வைப்பது எப்படி? |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |