உங்கள் வீட்டில் சப்பாத்தியா? மறந்துவிட்டு எப்போது போல் குருமாவை வைக்காதிங்க இதை ட்ரை பண்ணுங்க

chettinad kurma recipe in tamil

வெள்ளை குருமா செய்வது எப்படி..?

அனைத்து அன்பு சகோதர சகோதரிகளுக்கும் வணக்கங்கள் பொதுவாக வீட்டில்  சப்பாத்தி பூரி இட்லி தோசை என்றால் ஒரே மாதிரியான சட்னி சாம்பார் குருமா என்று இந்த மாதிரியான டிஸ் மட்டுமே செய்து பரிமாறுவோம். அதையே செய்து உங்களுக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் அலுத்து போகிவிட்டது என்றால்!, இன்று நாம் புதியதாக கடைகளில் விற்பது போல் செட்டிநாடு வெள்ளை குருமா எப்படி செய்வது என்று இந்த பதிவு படித்து தெரிந்துகொள்ள போகிறோம்.

Chettinad Vellai Kurma செய்ய தேவையான பொருட்கள்:

  • எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்,
  • பிரியாணி இலை – 1,
  • பட்டை சிறிய துண்டு – 1,
  • ஏலக்காய் – 2, கிராம்பு – 1,
  • சோம்பு – 1 டீஸ்பூன்,
  • கறிவேப்பிலை – சிறிது,
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1டேபிள் ஸ்பூன்,
  • பெரிய வெங்காயம் – 1,
  • கொத்தமல்லி – ஒரு கொத்து,
  • உப்பு – 1 ஸ்பூன்,
  • துருவிய தேங்காய் – 1 கப்,
  • பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன்,
  • முந்திரி – 5,
  • சோம்பு – 1 டீஸ்பூன்,
  • சீரகம் – 1, டீஸ்பூன்,
  • பச்சை மிளகாய் – 5,
  • கிராம்பு – 1,
  • ஏலக்காய் – 2,
  • பட்டை – 1
  • காய்கறிகள் – 1 கப் (கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், குடைமிளகாய், உருளைக்கிழங்கு).

ஸ்டேப் -1

முதலில் மிக்ஸியில் ஒரு கப் துருவிய தேங்காய் போடவும். அதனுடன் எடுத்துவைத்த பொட்டுக்கடலை, சீரகம், சோம்பு, முந்திரி, கிராம்பு, பட்டை, ஏலக்காய், பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கொரகொரவென்று அரைத்துக்கொள்ளவும்.

ஸ்டேப் -2

ஒரு காடையில் அல்லது குக்கரில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும் பின்பு அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.

ஸ்டேப் -3

வதங்கிய பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை தன்மை சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும். பின்பு நறுக்கிய காய்கறிகளை சேர்த்து. 2 அல்லது 3 நிமிடம் நன்கு வதக்கவும்.

ஸ்டேப் -4

வதங்கிய பின் மிக்ஸியில் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி கலந்துவிடவும் குக்கரில் வைத்து செய்தால் 2 விசில் விடவும். கடாயில் வைத்து செய்தால் குருமாவாக மாறும் வரை கொதிக்கவிடவும்.

ஸ்டேப் -5

கொத்த பிறகு சிறிது நேரம் கழித்து அதில் கொத்தமல்லி தலையை தூவி கம கம வென்று சப்பாத்தி பூரிக்கு செத்து சாப்பிடவும் சுவை வேறமாதிரி இருக்கும். அதுமட்டுமில்லாமல்.

இட்லி தோசைக்கு கடையில் வைக்கும் சாம்பார் எப்படி செய்வது தெரியுமா அதையும் தெரிந்துகொள்ளவும்கம கம சாம்பார் செய்முறை 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil