சுவையான சமையல் சிக்கன் லாலிபாப் செய்முறை விளக்கம்..!

Advertisement

சுவையான சமையல் சிக்கன் லாலிபாப் செய்முறை விளக்கம் (Chicken Lollipop Recipe Tamil)..!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான, சூப்பரான சிக்கன் லாலிபாப் செய்வது எப்படி (Chicken Lollipop Recipe Tamil) என்று இப்போது நாம் காண்போம் வாங்க..!

சிக்கன் லாலிபாப் (Chicken Lollipop Recipe Tamil) செய்ய தேவையான பொருட்கள்:-

சிக்கனை ஊறவைப்பதற்கு:-

  1. சிக்கன் கால்கள் – 8
  2. சோயா சாஸ் – 1 தேக்கரண்டி
  3. சில்லி சாஸ் – 1 தேக்கரண்டி
  4. உப்பு – தேவையான அளவு
  5. மிளகு – 1/2 தேக்கரண்டி
  6. சோள  மாவு – 2 தேக்கரண்டி
  7. மைதா – 1 தேக்கரண்டி
  8. முட்டை – 1
  9. பிரட் தூள் – தேவையான அளவு.
இந்த Secret Recipe சேர்த்தால் போதும் மொறு மொறுன்னு உளுந்து வடை ரெடி.

சாஸ் தயாரிக்க:

  1. எண்ணெய் – 2 தேக்கரண்டி
  2. பூண்டு – பொடிதாக நறுக்கியது சிறிதளவு.
  3. இஞ்சி – பொடித்தாக நறுக்கியது சிறிதளவு.
  4. வெங்காயம் – 1/4 கப் பொடிதாக நறுக்கியது.
  5. வெங்காயத்தாள் – 1/4 கப் பொடிதாக நறுக்கியது.
  6. சோயா சாஸ் – ஒரு மேசைக்கரண்டி
  7. சில்லி சாஸ் – 2 மேசைக்கரண்டி
  8. மிளகு – 1/2 தேக்கரண்டி
  9. உப்பு – தேவையான அளவு
  10. தண்ணீர் – தேவையான அளவு
  11. ஸ்வீட் & ஸ்பைசி சாஸ் – ஒரு தேக்கரண்டி
சிக்கன் 65 செய்வது எப்படி 

Chicken Lollipop Recipe in Tamil

சிக்கன் லாலிபாப் செய்முறை ஸ்டேப்: 1

முதலில் சிக்கன் கால்களை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

இப்பொழுது சிக்கன் கால்களை ஊறவைக்க வேண்டும், அதற்கு ஒரு பவுலில் கழுவிய சிக்கன் கால்களை எடுத்து கொள்ளவும், அவற்றில் ஒரு டீஸ்பூன் சோயா சாஸ், ஒரு டீஸ்பூன் சில்லி சாஸ், ஒரு டீஸ்பூன் சோள மாவு, ஒரு டீஸ்பூன் மைதா மாவு, தேவையான அளவு உப்பு, 1/2 டீஸ்பூன் மிளகு தூள் மற்றும் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும், பின்பு 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

சிக்கன் லாலிபாப் செய்முறை ஸ்டேப்: 2

30 நிமிடங்கள் கழித்த பின் சிக்கன் கால்களை பிரட் தூளில் சேர்த்து நன்றாக பிரட்டி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

பின்பு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அவற்றில் சிக்கனை பொறிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்றி சூடேற்ற வேண்டும்.

சிக்கன் லாலிபாப் செய்முறை ஸ்டேப்: 3

எண்ணெய் சூடேறியதும் தனியா எடுத்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். சிக்கனை பொரிக்கும் போது அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பொரித்தெடுக்கவும்.

சிக்கன் லாலிபாப் செய்முறை ஸ்டேப்: 4

இப்பொழுது சாஸ் தயார் செய்ய வேண்டும். அதற்கு அடுப்பில் ஒரு கடாயை வைத்து, அவற்றில் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடேறியதும், பொடிதாக நறுக்கிய பூண்டு மற்றும் இஞ்சியை சேர்த்து வதக்க வேண்டும்.

சிக்கன் லாலிபாப் செய்முறை ஸ்டேப்: 5

பின்பு பொடிதாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் வெங்காயத்தாள் ஆகியவற்றை சேர்த்தும் இரண்டு நிமிடம் வரை வதக்க வேண்டும்.

நன்றாக வதங்கியதும் ஒரு மேசைக்கரண்டி சோயா சாஸ், இரண்டு ஸ்பூன் ஸ்வீட் & ஸ்பைசி சாஸ், சிறிதளவு மிளகு தூள் மற்றும் சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.

சிக்கன் லாலிபாப் செய்முறை ஸ்டேப்: 6

பின்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து திரும்பவும் ஒருமுறை நன்றாக கிளறிவிடவும். சாஸ் ஓரளவு திக்காகியதும் பொரித்து வைத்துள்ள சிக்கன் லாலிபாப் சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.

அவ்வளவுதான் சுவையான லாலிபாப் தயார் அனைவருக்கும் அன்புடன் பரிமாறவும்.

சத்து மாவு செய்முறை அதன் பயன்கள் மற்றும் சத்து மாவு ரெசிபிஸ்..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சுவை சுவையான சமையல் குறிப்புகள்!!!
Advertisement