ஹோட்டல் ஸ்டெயில் சிக்கன் நூடுல்ஸ் 10 நிமிடத்தில் செய்வது எப்படி?

சிக்கன் நூடுல்ஸ் செய்வது எப்படி? | Chicken Noodles Seivathu Eppadi

சிக்கன் 65 அனைவருக்கும் பிடிக்கும் அதனை விட இப்போது அனைவரும் விரும்பி சாப்பிடுவது சிக்கன் நூடுல்ஸ் மிகவும் பிடிக்கும். நூடுல்ஸ் வெளியில் வாங்கி சாப்பிடுவதை விட வீட்டில் செய்து சாப்பிட்டால் உடலுக்கும் நன்மையை அளிக்கும். அதனை விட நாம் செய்தால் அதில் சுத்தமாக இருக்கும் என்று ஒரு நம்பிக்கையில் இருக்கும். ஆகையால் வீட்டில் சிக்கன் நூடுல்ஸ் செய்து சாப்பிடுங்கள். வாங்க எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Chicken Noodles Ingredients List in Tamil:

 1. சிக்கன் எலும்பு இல்லாமல் – 200 கிராம்
 2. நூடுல்ஸ் – 150 கிராம்
 3. எலுமிச்சை பழம் – 2
 4. மிளகாய் தூள் –  5 ஸ்பூன்
 5. மிளகு தூள்  – 4 டீஸ்பூன்
 6. உப்பு தேவையான அளவு
 7. சோளமாவு – டேபிள் ஸ்பூன்
 8. முட்டை – 3
 9. எண்ணெய் – 1/4 லிட்டர்
 10. பூண்டு – 1 டேபிள் ஸ்பூன் பொடிதாக நறுக்கியது
 11. இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன் பொடிதாக நறுக்கியது
 12. வெங்காயம் – பாதி, நறுக்கியது
 13. கேரட் – 1 நறுக்கியது
 14. முட்டை கோஸ் – சிறிதளவு
 15. குடை மிளகாய் – பாதி
 16. சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
 17. மிளகாய் சாஸ் –  1 டேபிள் ஸ்பூன்
 18. தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்

இதையும் ட்ரை பண்ணுங்க 👉👉 காளான் கிரேவி செய்வது எப்படி?

Easy Chicken Noodles Recipe in Tamil:

ஸ்டேப்: 1

முதலில் கழுவிய சிக்கின் எடுத்துக்கொள்ளவும் அதன் பின் அதில் பாதி எலுமிச்சை பழ சாறு சேர்க்கவும், பின் அதனுடன் 1 ஸ்பூன் மிளகாய் தூள், 1/4 டீஸ்பூன் மிளகு தூள், உப்பு சிறிதளவு அதன் கூடவே சோளமாவு 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து விடவும். அதன் பின் 30 நிமிடம் அப்படியே ஊறவிடவும்.

ஸ்டேப்: 2

அடுத்து அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் சூடானதும் அதில் கலந்துவைத்த சிக்கனை போட்டு பொரித்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஸ்டேப்: 3

இப்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைக்கவும் நூடுல்ஸ் வேகம் அளவிற்கு ஊற்றி கொதிக்கவிடவும், நூடுல்ஸ் 3 நிமிடம் வெந்து விடும் அதன் பின் அதனை வடிகட்டி அதில் சிறிது எண்ணெய் ஊற்றி கலந்து விட்டு தனியாக வைக்கவும்.

ஸ்டேப்: 4

பின்பு ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து 3 முட்டையை ஊற்றி 1 நிமிடம் அப்படியே விட்டு அதன் பின் கலந்துவிடவும் அப்போது தான் பெரிய துண்டாக முட்டை கிடைக்கும் அது கொஞ்சம் வேகும் போதே அதில் கொஞ்சம் உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்து விடவும். அதன் பின் அதனை தனியாக வைக்கவும்.

செஞ்சி பாருங்கள் 👉👉 ரோட்டுக்கடை காளான் இனி வீட்டிலேயே செய்யலாம்

ஸ்டேப்: 5

Restaurant Style Chicken Noodles Recipe

பின்பு ஒரு கடாயை எடுத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் பூண்டு – 1 டேபிள் ஸ்பூன், இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து கலந்து விடவும்.   இப்போது அதில் வெங்காயம் – பாதி நறுக்கியது, கேரட் – 1 நறுக்கியது முட்டை கோஸ் – சிறிதளவு, குடை மிளகாய் – பாதி சேர்த்து 2 நிமிடம் கலந்து விடவும்.

ஸ்டேப்: 6

அடுத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ், 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் சாஸ் –
தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்  சேர்த்து ஒரு முறை கலந்து விடவும்.

ஸ்டேப்: 7

கலந்த பின் நாம் செய்து வைத்த நூடுல்ஸ் சேர்க்கவும் அதனுடன் பொரித்து வாய்த்த சிக்கன், முட்டை சேர்த்துக்கொள்ளவும். கடைசியாக கொஞ்சம் மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்,

ஸ்டேப்: 8

கடைசியாக அடுப்பை அதிகமாக தீயில் வைத்துவிட்டு கொத்தமல்லி தழையை தூவி ஒரு முறை கலந்து விட்டால் அதனுடைய சுவை தனியாக இருக்கும் அனைவரும் வீட்டில் செய்து சாப்பிட்டு பாருங்கள்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்