வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ருசியான சிக்கன் ஊறுகாய் செய்வது எப்படி தெரியுமா ?

Updated On: September 6, 2023 12:50 PM
Follow Us:
chicken pickle recipe in tamil
---Advertisement---
Advertisement

ருசியான சிக்கன் ஊறுகாய்

வணக்கம் நண்பர்களே இன்று நம் பொதுநலம்.காம் பதிவில் ருசியான சிக்கன் ஊறுகாய் எப்படி செய்வது என்று பார்க்கலாம். பொதுவாகவே பண்டைய காலம் முதலே ஊறுகாய் நமது உணவு முறையில் முக்கியம் இடம் பிடித்து வருகிறது. சிறிதளவு ஊறுகாய் முழு உணவுக்கும் புது சுவை சேர்த்துவிடும். அந்தவகையில் எலுமிச்சை, மாங்காய், பூண்டு, நார்த்தங்காய், கத்திரிக்காய் ஊறுகாய் எல்லாம் ருசித்து சலித்தவர்களுக்கு வித்தியாசமான சுவை கொண்ட சிக்கன் ஊறுகாய் செய்து கொடுக்கலாம். மற்ற பாரம்பரிய ஊறுகாயைப்  போல பதப்படுத்தும் செயல்முறை இதற்குத் தேவையில்லை. அசைவ பிரியர்களுக்கு பிடிக்கும் சிக்கன் ஊறுகாய்  எப்படி செய்வது  என்று பார்க்கலாம் வாங்க.

சிக்கன் போட்டு அசத்தலான சேமியா பிரியாணி

சிக்கன் ஊறுகாய்க்கு தேவையான பொருட்கள்:

பொரிப்பதற்குத் தேவையானவை:

  • கோழிக்கறி-500 கிராம்
  • மஞ்சத்தூள் -1/2 தேக்கரண்டி
  • மிளகாய்த்தூள் -1 தேக்கரண்டி
  • இஞ்சி பூண்டு விழுது -1 மேசைக்கரண்டி
  • நல்லெண்ணெய் -தேவையான அளவு

மசாலா தயாரிக்கத் தேவையானவை:

  • நல்லெண்ணெய் -2 மேசைக்  கரண்டி
  • இஞ்சி பூண்டு விழுது 2 மேசைக்கரண்டி
  • மஞ்சத்தூள் -1/4 தேக்கரண்டி
  • மிளகாய்த்தூள் -1/4 கப்
  • கடுகுத்தூள் -1 மேசைக் கரண்டி
  • வெந்தயத்தூள்-1/4 தேக்கரண்டி
  • எலுமிச்சைபழம் -அரை மூடி

தாளிப்பதற்குத் தேவையானவை:

  • நல்லெண்ணெய்- 2 மேசை கரண்டி
  • வெந்தயம் -1 தேக்கரண்டி
  • காய்ந்த மிளகாய் -5
  • கறிவேப்பிலை-10
  • உப்பு- தேவையான அளவு

சிக்கன் ஊறுகாய் செய்முறை:

ஸ்டேப் – 1

முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில், சுத்தம் செய்த கோழிக்கறி, மஞ்சத்தூள், மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு, நன்றாக கலந்து 30 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.

ஸ்டேப்- 2

முதலில் அடுப்பில் கடாயை வைக்கவும். அதில் சிக்கனை பொரிப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். ஊறவைத்த கோழிக்கறியை சிறிது சிறிதாக அதில் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாகவும், மிருதுவாகவும் மாறும் வரை பொரித்து எடுக்க வேண்டும்.

ஸ்டேப்- 3

மற்றொரு கடாயை எடுத்து கொண்டு மசாலா தயாரிக்க தேவையான அளவு எண்ணெய்  ஊற்றி சூடு படுத்தவும். பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து  2 நிமிடம் வதக்கவும்.

ஸ்டேப்- 4

இஞ்சி பூண்டு வாசனை  போன பிறகு அதில் மஞ்சத்தூள், மிளகாய்த்தூள், கடுகுத்தூள், மற்றும் வெந்தயத்தூள் சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கவும். இந்த மசாலா கலவையுடன் பொரித்து வைத்த சிக்கனை சேர்த்து நன்றாக கலக்கவும்.

ஸ்டேப்- 5

மற்றொரு கடாயை எடுத்து தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்  ஊற்ற வேண்டும். எண்ணெய்  சூடானதும் வெந்தயம், காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின்பு அதில் தேவையான உப்பு சேர்த்து கலக்கவும். பின்பு அடுப்பை அணைத்து விட வேண்டும்.

ஸ்டேப்- 6

பிறகு தாளிப்பை சிக்கனுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பின்பு சூடு தணியும் வரை ஆறவைத்து பின்பு இந்த சிக்கன் ஊறுகாயில் எலுமிச்சை பழம் சாற்றைப்  பிழிந்து விட வேண்டும். உணவில் ருசியான சிக்கன் ஊறுகாயை  சேர்த்து சாப்பிட வேண்டியது தான்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal

 

Advertisement

Abirami Baskar

Hello, I m Abirami working as Junior Content Writer in Pothunalam.com, I would like to write a topics based on the following categories such as Health Tips, Beauty Tips, Recipes, Home Improvements & Banking Tips.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now