சிக்கன் சவர்மா | Chicken Shawarma Roll Recipe
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்ற சிக்கன் சவர்மா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம். இந்த ரெசிபியை கடையில் அடிக்கடி சாப்பிட வேண்டிய அவசியமில்லை. அதோடு கடையில் வாங்கி சாப்பிட்டால் உடலில் பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் ஆரோக்கியமான முறையில் சிக்கன் சவர்மா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl=
சவர்மா செய்ய தேவையான பொருட்கள்
- மைதா மாவு – 3 கப்
- ஈஸ்ட் -2 தேக்கரண்டி
- சிக்கன் – 1/2 கிலோ
- கேரட் -1
- வெள்ளரிக்காய் -1
- பச்சை மிளகாய்- 5
- புதினா இலை – சிறிதளவு
- எலுமிச்சை சாறு – சிறிதளவு
- மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
- தயிர் – 4 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
- பல் பூண்டு -1
- மிளகு தூள் – சிறிதளவு
சிக்கன் சவர்மா செய்முறை:
ஒரு கிண்ணத்தில் ஒரு கப் வெதுவெதுப்பான தண்ணீர், 1 தேக்கரண்டி சர்க்கரை, 2 தேக்கரண்டி ஈஸ்ட் சேர்த்து கலந்து 5 நிமிடம் அப்படியே வைத்திருக்க வேண்டும்.
பின் ஒரு கிண்ணத்தில் மைதா மாவு 3 கப், உப்பு, கலந்து வைத்த ஈஸ்ட் சேர்த்து கலந்து கொள்ளவும். மாவை நன்றாக பரோட்டா மாவு போல பிசைந்து 2 மணி நேரம் இருக்க வேண்டும்.
2 மணி நேரம் கழித்து மாவை 10 உருண்டையாக உருட்டி கொள்ளவும். பின் உருட்டிய மாவை சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்த்து கொள்ளவும். மெல்லிசாகவும் இருக்க கூடாது, கனமாகவும் இருக்க கூடாது, மீடியமாக இருக்க வேண்டும்.
அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடானதும் தேய்த்து வைத்த மாவை ஒவ்வொன்றாக போட்டு எடுக்கவும்.
தோசை கல்லில் போட்டு எடுத்ததை இரண்டாக நறுக்கி கொள்ளவும்.
இதையும் செய்து பாருங்கள் ⇒ சில்லி கொத்து சப்பாத்தி
சாலட் செய்முறை:
ஒரு கிண்ணத்தில் நீளமாக நறுக்கிய கேரட், வெள்ளரிக்காய், பச்சை மிளகாய், புதினா இலை, சிறிதளவு எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
சிக்கன் :
அடுத்து ஒரு பாத்திரத்தில் 1/2 கிலோ சிக்கன், 4 தேக்கரண்டி தயிர், 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், மிளகாய் தூள் 2 தேக்கரண்டி சிறிதளவு எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து 1/2 மணி நேரம் அப்படியே ஊற வைக்க வேண்டும்.
1/2 மணி நேரம் கழித்து அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் கலந்து வைத்த சிக்கனை போட்டு சிவந்த நிறம் வந்ததும் எடுத்து விட வேண்டும். இந்த சிக்கன் ஆறியதும் சின்ன சின்னதாக நறுக்கி கொள்ளவும்.
Mayonnaise:
அடுத்து ஒரு பாத்திரத்தில் 1/2 Mayonnaise, நறுக்கிய 1 பல் பூண்டு, மிளகு தூள் சிறிதளவு சேர்த்து கலந்து கொள்ளவும்.
ஒரு பீட்டா பரோட்டா எடுத்து அதன் உள்பகுதியில் Garlic Mayonnaise -யை தடவி கொள்ளவும். அதன் மேலே சிக்கன் அதன் மேலே நறுக்கி வைத்த காய்கறி, அதன் மேலே Garlic Mayonnaise வைத்து மடக்கினால் சிக்கன் சவர்மா ரெடி..!
இதையும் செய்து பாருங்கள் ⇒ மீந்து போன சப்பாத்தியில் நூடுல்ஸ் செய்யலாம் வாங்க
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |