சில்லி சிக்கன் செய்வது எப்படி.?
வணக்கம் நண்பர்களே இன்று நம் சமையல் பதிவில் ரோட்டு கடை சில்லி சிக்கன் மிகவும் அருமையாக எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். இந்த சில்லி சிக்கனை மாலை நேரங்களில் ஸ்நாக்ஸாக கூட சாப்பிடலாம். அப்படி இல்லை என்றால் உங்கள் வீட்டில் பிரியாணி, புலவு சாதம், தக்காளி சாதம், ரசம் போன்றவற்றிக்கு சைடிஸாக சாப்பிடலாம். சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட இந்த சில்லி சிக்கனை பார்த்தவுடன் சாப்பிடும். மேலும் இந்த சுவையான ரோட்டு கடை சில்லி சிக்கனை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் அளவிற்கு எப்படி செய்யலாம் என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.
சிக்கன் 65 யை மிஞ்சிடும்.! சோயா 65 |
சில்லி சிக்கன் செய்வது எப்படி.?
தேவைப்படும் பொருள்:
- சிக்கன்- அரை கிலோ
- மஞ்சள்தூள்- சிறிதளவு
- கரம்மசாலா-தேவையான அளவு
- இஞ்சிபூண்டு விழுது – 2 ஸ்பூன்
- புதினா-சிறிதளவு
- கொத்தமல்லி -சிறிதளவு
- வெங்காயம்- 1
- எலுமிச்சை- 1
- கருவேப்பிலை -சிறிதளவு
ரோட்டு கடை சில்லி சிக்கன் செய்முறை:
ஸ்டேப்:1
முதலில் நீங்கள் வாங்கிய சிக்கனை சுத்தம் செய்துவிட்டு அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். நறுக்கிய பிறகு அதற்கு தேவையான மசாலா பொருட்களை எடுத்துக்கொள்ளவேண்டும்.
ஸ்டேப்:2
அடுத்ததாக ஒரு பாத்திரைத்தை எடுத்துக்கொண்டு அதில் சிக்கன், மஞ்சள்தூள் சிறிதளவு, கரம்மசாலாதேவையான அளவு, இஞ்சிபூண்டு விழுது 2 ஸ்பூன், புதினா சிறிதளவு, கொத்தமல்லி சிறிதளவு போன்றவற்றை நன்றாக கலந்து கொண்டு அதை 15 நிமிடம் பிரிட்ஜில் வைக்க வேண்டும்.
ஸ்டேப்:3
அடுத்ததாக ஒரு கடாயை எடுத்து கொண்டு அதில் தேவையான அளவு எண்ணெய் சேர்க்கவேண்டும். எண்ணெய் சூடானதும் பிரிட்ஜில் இருக்கும் மசாலாவை எடுத்து ஒன்று ஒன்றாக எடுத்து பொறுமையாக பொரித்து எடுக்கவும்.
ஸ்டேப்:4
பிறகு பொரித்து எடுத்த சில்லி சிக்கனை ஒரு கிண்ணத்தில் வைக்கவேண்டும். அடுத்ததாக அந்த அடுப்பை அணைத்து விட்டு அதில் கருவேப்பிலையை பொறித்து அந்த சில்லி சிக்கன் இருக்கும் பாத்திரத்தில் மேல் தூவி விடவும்.
ஸ்டேப்:5
அடுத்ததாக ஒரு பெரிய வெங்காயத்தை எடுத்து அதை வட்ட வட்டமாக நறுக்கி அந்த பொறித்து வைத்த சில்லி சிக்கனில் சேர்க்க வேண்டும். சில்லி சிக்கனில் வெங்காயத்தை சேர்த்து சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து அதை சாப்பிட்டு பாருங்கள் சுவையாக இருக்கும். மேலும் இந்த சமையல் குறிப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் நீங்களும் செய்து பாருங்கள்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |