வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தக்காளி சேர்க்காமல் சுவையான சட்னி செய்யலாம் வாங்க..!

Updated On: October 26, 2024 12:19 PM
Follow Us:
vengaya chutney seivathu eppadi
---Advertisement---
Advertisement

சின்ன வெங்காய சட்னி செய்வது எப்படி.? | வெங்காய கார சட்னி செய்வது எப்படி.?

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் . இப்பதிவில் சின்ன வெங்காய சட்னி செய்வது எப்படி.? (Vengaya Chutney Seivathu Eppadi) என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க. இட்லி தோசைக்கு சட்னி, சாம்பார், பொடி போன்றவற்றை தொட்டு தான் சாப்பிடுவோம். சட்னியிலே வெங்காய சட்னி, தக்காளி சட்னி, இஞ்சி சட்னி, பூண்டு சட்னி போன்றவை தான் செய்திருப்போம். ஒரே மாதிரி சாப்பிட்டு போர் அடித்திட்டு விட்டது என்றால் இந்த மாதிரி சட்னி செய்து சாப்பிடுங்க. சரி வாங்க இந்த சட்னி செய்வது எப்படி என்று இந்த பதிவை படித்து தெரிந்து கொள்வோம்.

வெங்காய சட்னி செய்ய தேவையான  பொருட்கள்:

  1. சின்ன வெங்காயம் – தேவையான அளவு
  2. காய்ந்த மிளகாய் –5
  3. கடுகு –1தேக்கரண்டி 
  4. உளுத்தப்பருப்பு –1/2 தேக்கரண்டி
  5. கறிவேப்பிலை – சிறிதளவு 
  6. உப்பு – தேவையான அளவு 
  7. புளி –சிறிதளவு
  8. எண்ணெய் –3 தேக்கரண்டி

சட்னி செய்முறை:

வெங்காய கார சட்னி செய்வது எப்படி

அடுப்பில் கடாய் வைத்து 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் 5 காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும். தேவையான அளவு உப்பு, சிறிதளவு புளி சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

வதக்கிய பொருட்கள் ஆறியதும் மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

பிறகு சட்னியை தாளிப்பதற்கு அடுப்பில் கடாய் வைத்து 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் 1 தேக்கரண்டி கடுகு, 1/2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, 1 காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கி பின் நாம் அரைத்த சட்னியை சேர்க்கவும். அவ்ளோ தாங்க சின்ன வெங்காய சட்னி ரெடி..!

இந்த சட்னியும் செய்து பாருங்கள் ⇒ முள்ளங்கியில் சட்னியா புதுசா இருக்கே.! ட்ரை பண்ணி பாருங்க

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை