Christmas Cake Recipe in Tamil
ஹாய் நண்பர்களே..! இன்றைய பதிவில் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் மில்க் கேரமல் கேக் செய்வது எப்படி என்பதை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். வரவிருக்கும் கிறிஸ்துமஸ்க்கு உங்கள் வீட்டில் உள்ள சில பொருட்களை மட்டும் வைத்து மிகவும் எளிமையான முறையில் வீட்டிலேயே கேரமல் கேக் செய்யலாம். அது எப்படி என்பதை பற்றி தான் இந்த பதிவில் காண இருக்கின்றோம்.
அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள ரெசிபி உங்களுக்கு பிடித்து இருந்தால் நீங்களும் இந்த கிறிஸ்துமஸ்க்கு உங்கள் வீட்டில் இந்த கேரமல் கேக்கை செய்து சுவைத்துப்பாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Milk Cake Recipe in Tamil:
முதலில் இந்த மில்க் கேரமல் கேக் செய்ய தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- பால் – 2 கப்
- சர்க்கரை – 4 கப்
- முட்டை – 6
- பிரெட் – 10
- ரோஸ் கலர் ஃபுட்கலர் – 1/2 டீஸ்பூன்
- தண்ணீர் – 1 கப்
செய்முறை:
ஸ்டேப் – 1
முதலில் நாம் எடுத்துவைத்துள்ள 2 கப் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் எடுத்துவைத்துள்ள 6 முட்டையையும் உடைத்து ஊற்றி நன்கு கலந்துகொள்ளுங்கள். பின்னர் அதனுடன் 2 கப் சர்க்கரை மற்றும் 1/2 டீஸ்பூன் ரோஸ் கலர் ஃபுட்கலரயும் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 2
அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 2 கப் சர்க்கரையை சேர்த்து 1 கப் தண்ணீரை ஊற்றி சர்க்கரை நன்றாக கரையும் வரை கலந்துகொள்ளுங்கள். இப்பொழுது சர்க்கரை கரைந்து ஒரு கம்பி பதத்திற்கு வந்தவுடன் அதனை எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி சிறிது நேரம் சூடு ஆறவிடுங்கள்.
ஸ்டேப் – 3
பின்னர் ஒரு மிக்சி ஜாரில் 10 பிரெட்டுகளை சிறிய துண்டுகளாக நறுக்கி போட்டு நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த பிரெட்டினை நாம் தயார் செய்து வைத்திருந்த பால் மற்றும் முட்டை கலவையில் சேர்த்து சிறிது நேரம் அடுப்பில் வைத்து நன்கு கலந்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 4
கலந்துவைத்துள்ள இந்த கலவையினை நாம் முன்னரே தயார் செய்து வைத்திருந்த சர்க்கரை பாகுடன் ஊற்றிக்கொள்ளுங்கள்.
பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் சிறிதளவு தண்ணீரை ஊற்றி அதில் நாம் கலந்துவைத்துள்ள கலவையினை பாத்திரத்த்துடன் வைத்து மூடிபோட்டு நன்கு வேகவைத்து எடுத்தால் நமது மில்க் கேரமல் கேக் தயாராகிவிடும்.
இந்த மில்க் கேரமல் கேக் ரெசிபியை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து சுவைத்துப்பாருங்கள்.
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் பிளம் கேக் செய்முறை
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |