ஒரு மாதம் வரை இந்த சட்னி பொடியை வைத்து கொள்ளலாம் ..!

Advertisement

சட்னி பொடி எப்படி செய்வது | Chutney Powder Recipe in Tamil

தினமும் காலை இரவு இட்லி, தோசை தான் சாப்பிடுவது இப்போது உள்ள பழக்கமாக இருக்கிறது. ஆகையால் அதற்கு தினமும் சட்னி, சாம்பார் வைப்பதும் வழக்கமாக இருக்கிறது.

ஒரே மாதிரியான சட்னி சாப்பிடுவதும் கொஞ்சம் கடுப்பாக இருக்கும். அதனை விட மிகவும் முக்கியமாக ஒன்று ஊருக்கு சென்று வரும் போது. வந்தவுடன் சட்னி செய்ய வேண்டும் என்று அனைவரும் சொல்வார்கள். ஆனால் அனைவருக்கும் அசதி இருக்கும் ஆகையால் சமையல் செய்யும் அனைவருக்கும் இந்த ட்ரிக்ஸ் சொல்வதில் மகிழ்ச்சி உங்களுக்கு மிகவும் ஈசியாக சட்னி பொடி செய்வது எப்படி என்று பார்ப்போம் வாங்க..!

Chutney Powder Recipe in Tamil:

தேவையான பொருட்கள்:

  1. வேர்க்கடலை – 4 டேபிள் ஸ்பூன்
  2. வெள்ளை உளுந்து – 3 டேபிள் ஸ்பூன்
  3. பொட்டுக்கடலை – 3 டேபிள் ஸ்பூன்
  4. பூண்டு – 4 பல்
  5. வரமிளகாய் – 10 
  6. புளி – சிறிதளவு
  7. கருவேப்பிலை – 1 கொத்து
  8. சீரகம் – 1 டீஸ்பூன்
  9. கொத்தமல்லி – 1 கொத்து
  10. கொப்பரை தேங்காய் துருவியது – 1 கப்
  11. எண்ணெய் – 2 ஸ்பூன்
  12. உப்பு – தேவையான அளவு

செய்முறை:

ஸ்டேப்: 1

 chutney powder recipe in tamil

முதலில் ஒரு கடாயை எடுத்து அதில் வேர்க்கடலையை சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

பின்பு அதே கடாயில் வெள்ளை உளுந்து – 3 டேபிள் ஸ்பூன்  சேர்த்து வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.

ஸ்டேப்: 2

பின் அதில் பொட்டுக்கடலை – 3 டேபிள் ஸ்பூன் சேர்த்து வறுத்து தனியாக வைத்துக்கவும்.

ஸ்டேப்: 3

கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் எடுத்து வைத்துள்ள பூண்டை போட்டு ஒரு முறை வறுத்துக்கொண்டு அதே கடாயில் வரமிளகாய் – 10, புளி – சிறிதளவு, கருவேப்பிலை – 1 கொத்து, சீரகம் – 1 டீஸ்பூன், கொத்தமல்லி – 1 கொத்து சேர்த்து நன்கு வறுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

ஸ்டேப்: 4

 chutney powder recipe in tamil

பின்பு அதே கடாயில் தேங்காயை துருவலை போட்டு வறுத்து எடுத்துக்கொள்ளவும். இப்போது அனைத்தையும் சேர்த்து மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.

சும்மா ட்ரை பண்ணலாம் 👉👉 முள்ளங்கியில் சட்னியா புதுசா இருக்கே.! ட்ரை பண்ணி பாருங்க

ஸ்டேப்: 5

கடைசியாக இதனை எடுத்து ஒரு பாட்டிலில் போட்டு பிரிட்ஜியில் வைத்துக்கொண்டால் தேவை உள்ள போது 3 டேபிள் ஸ்பூன் போட்டு தண்ணீர் சேர்த்து தாளித்து கொள்ளலாம். தாளிக்க தேவையான பொருட்கள்.

  • 1 கொத்து கருவேப்பிலை
  • உளுத்தம்பருப்பு –  1 ஸ்பூன்
  • குண்டு மிளகாய் – 2
  • எண்ணெய் – சிறிதளவு

முதலில் எண்ணெயை விட்டு உளுத்தம்பருப்பு, கடுகு சேர்த்து தாளிக்கவும் பின் அதில் வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின் கரைத்துவைத்த சட்னியில் சேர்த்து கலந்துவிடவும். பின் உங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப தோசை இட்லிக்கு சாப்பிட்டோம் என்றால் சுவையாக இருக்கும்.

இதையும் செய்து பாருங்கள் ⇒ ஒரே சட்னி செய்யாமல் இந்த சட்னி செய்து பாருங்க..! சுவை சும்மா அள்ளும்

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal
Advertisement