வெங்காயம், தக்காளி, தேங்காய் சேர்க்காமல் சூப்பரான சட்னி ரெசிபி..! Easy Chutney Recipes Without Coconut..!

chutney recipes in tamil

10 இட்லி சாப்பிட தூண்டும் தேங்காய், தக்காளி சேர்க்காத புதுவித சட்னி..! Chutney Recipe Without Coconut And Tomato..!

Chutney Recipes In Tamil: பொதுநலம்.காம் பதிவில் வெங்காயம், தக்காளி, தேங்காய் சேர்க்காமல் புதுவித சட்னி ரெசிபியை பற்றி இன்றைய பதிவில் பார்க்க போகிறோம். வீட்டில் உள்ளவர்களுக்கு எப்போதும் காலை மற்றும் இரவு உணவு சாப்பிடும்போது தினமும் ஒரே மாதிரி செய்த சட்னி வகைகளை சாப்பிட்டு அலுத்து போய் இருக்கும். அதனால் இந்த பொதுநலம் பதிவில் சூப்பரான சட்னி ரெசிபி பற்றி எப்படி செய்யலாம்னு படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!

newஇட்லி தோசைக்கு ஏற்ற சட்னி வகைகள் தமிழில்..! Different chutney recipes in tamil..!

சட்னி ரெசிபி செய்ய – தேவையான பொருட்கள்:

 1. நல்லெண்ணெய் – 2 ஸ்பூன் 
 2. பூண்டு – 1 கைப்பிடி அளவு 
 3. உளுத்தம் பருப்பு (அ) கடலை பருப்பு – 1/4 அளவு 
 4. வேர்க்கடலை – 1 கப் 
 5. பொட்டுக்கடலை – 1/4 கப் 
 6. மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன் 
 7. உப்பு – தேவையான அளவு 
 8. புளி கரைத்த நீர் – 1/2 கப் 
 9. வரமிளகாய் – 4 அல்லது 5
 10. கடுகு – சிறிதளவு 
 11. சீரகம் – சிறிதளவு 
 12. பெருங்காய தூள் – சிறிதளவு 

சுவையான சட்னி ரெசிபி எப்படி செய்வது செய்முறை விளக்கம் 1:

முதலில் ஒரு கடாயை ஹீட் செய்துக்கொள்ள வேண்டும். கடாய் நன்றாக ஹீட் ஆன பிறகு 2 ஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணெய் சேர்க்க வேண்டும். அடுத்து ஒரு கைப்பிடி அளவிற்கு பூண்டை சேர்த்து கொள்ளவேண்டும். விருப்பம் இல்லாதவர்கள் பூண்டு சேர்க்காமல் கூட செய்யலாம்.

ஐந்தே நிமிடத்தில் சட்னி ரெசிபி செய்முறை விளக்கம் 2:

கடாயில் அடுத்து உளுத்தம் பருப்பை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும். உளுந்தை நன்றாக வதக்கிய பிறகு இதனுடன் வேர்க்கடலை 1 கப் அளவிற்கு சேர்த்து மிதமான சூட்டில் வைத்து கடலையை வறுக்கவும்.

தேங்காய், தக்காளி சேர்க்காத புதுவித சட்னி செய்முறை விளக்கம் 3:

அடுத்ததாக கடலை நன்றாக வறுபட்ட பிறகு கால் கப் அளவிற்கு பொட்டுக்கடலை சேர்த்து வதக்க வேண்டும். அடுத்து மிளகாய் தூள் 1 ஸ்பூன் அளவிற்கு சேர்த்துக்கொள்ள வேண்டும். தேவைக்கேற்றவாறு மிளகாய் தூளின் அளவை நாம் சேர்த்துக்கொள்ளலாம்.

newநிலக்கடலை சட்னி வைப்பது எப்படி

வெங்காயம், தக்காளி, தேங்காய் சேர்க்காமல் சட்னி ரெசிபி செய்முறை விளக்கம் 4:

மிளகாய் தூள் சேர்த்தபிறகு உப்பு தேவையான அளவிற்கு சேர்த்துக்கொள்ள வேண்டும். உப்பு சேர்த்தபிறகு மிதமான சூட்டில் வைத்தே ஒருமுறை நன்றாக கிளறிவிட வேண்டும். அடுத்து இதில் 1/2 கப் அளவிற்கு புளி கரைத்துவைத்த நீரை இதில் சேர்த்து கிளறிவிட வேண்டும். புளி கரைத்த நீர்சேர்த்த பிறகு அடுப்பில் 30 நிமிடம் வைத்திருக்க வேண்டும்.

சட்னி ரெசிபி எப்படி செய்வது செய்முறை விளக்கம் 5:

இப்போது அடுப்பை நிறுத்திக்கொள்ளலாம். அடுப்பை நிறுத்திய பிறகு சிறிதுநேரம் சட்னிக்கு ரெடி செய்த பொருளை ஆறவைக்க வேண்டும். நன்றாக ஆறிய பிறகு மிக்ஸி ஜாரில் தேவையான அளவிற்கு தண்ணீர்  சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.

ஐந்தே நிமிடத்தில் சட்னி ரெசிபி செய்முறை விளக்கம் 6:

இப்போது சட்னியை தாளிப்பதற்கு சிறிய கடாயில் நெய் அல்லது எண்ணெய் எடுத்துக்கொள்ளவும். அடுத்து வரமிளகாய், கடுகு, சீரகம் (சீரகம் பிடிக்காதவர்கள் தவிர்த்துக்கொள்ளலாம்) சேர்த்து நன்றாக மிளகாய் பழுப்பு நிறம் வரும்வரை வறுத்துக்கொள்ளவும். அடுத்து கடாயில் சிறிதளவு பெருங்காய தூள் சேர்த்துக்கொள்ள வேண்டும். பெருங்காய தூளை சேர்த்தபிறகு மிக்ஸ் செய்துகொள்ள வேண்டும்.

இப்போது தாளித்ததை மிக்ஸி ஜாரில் அரைத்துவைத்த சட்னியுடன் சேர்க்கவும். கடைசியாக சிறிதளவு உப்பு வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். அவ்ளோதாங்க இந்த சட்னி ரெசிபி எல்லாரும் கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க..!

newவித்தியாசமான மிளகு கார சட்னி செய்யலாம் வாங்க..!

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil