Crispy Raw Banana Balls Recipe in Tamil
பள்ளி விட்டு வீட்டுக்கு திரும்பி வரக்கூடிய உங்கள் குழந்தைகளுக்கு மிகவும் சுவையான ஏதாவது புதிய ஸ்னாக்ஸ் ரெசிபி செய்து தர வேண்டும் என்று நினைக்கின்றீர்களா..? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்காக தான். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் மிகவும் எளிமையான மற்றும் மிகவும் ருசியான ஒரு ஸ்னாக்ஸ் ரெசிபியை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அது என்ன ரெசிபி என்றால் Crispy Raw Banana Balls தான். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இந்த Crispy Raw Banana Balls எப்படி செய்வது என்பதை அறிந்து கொண்டு உங்களின் குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Raw Banana Balls Recipe in Tamil:
முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- வாழைக்காய் – 2
- வெங்காயம் – 4
- மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன்
- கரம் மசாலா தூள் – 2 டீஸ்பூன்
- மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
- கொத்தமல்லி இலை – 1 கைப்பிடி அளவு
- பிரட் கிராம்ஸ் (Bread Grams) – 150 கிராம்
- மைதா மாவு – 3 டேபிள் ஸ்பூன்
- எண்ணெய் – தேவையான அளவு
- தண்ணீர் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
செய்முறை:
ஸ்டேப் – 1
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 2 வாழைக்காய்களையும் இரண்டாக நறுக்கி அதனுடனே சேர்த்து வேக வைத்து கொள்ளுங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> வாழைக்காய், உருளைக்கிழங்கு மட்டும் இருந்தால் போதும் மழைக்காலத்திற்கு ஏற்ற சூடான மற்றும் ருசியான ஸ்நாக்ஸ் ரெடி
ஸ்டேப் – 2
பின்னர் வேக வைத்துள்ள வாழைக்காயின் தோலினை நீக்கி விட்டு நன்கு மசித்து கொள்ளுங்கள். பிறகு அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 2 டீஸ்பூன் கரம் மசாலா தூள், 2 டீஸ்பூன் மிளகாய் தூள், 50 கிராம் பிரட் கிராம்ஸ் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 3
அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 4 வெங்காயம் மற்றும் 1 கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும். பின் இதனையும் சேர்த்து பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 4
அடுத்து ஒரு சிறிய கிண்ணத்தில் நாம் எடுத்து வைத்துள்ள 3 டேபிள் ஸ்பூன் மைதா மாவினை சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து வைத்து கொள்ளுங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> வீட்டில் வாழைப்பழம் இருக்குதா அப்போ இந்த மாதிரி ருசியான ரெசிபியை செஞ்சி பாருங்க
ஸ்டேப் – 5
இப்பொழுது நாம் முன்னரே உருட்டி வைத்துள்ள உருண்டைகளை நாம் தயார் செய்து வைத்துள்ள மைதா மாவு கலவையில் நனைத்து நாம் எடுத்து வைத்துள்ள 100 கிராம் பிரட் கிராம்ஸில் போட்டு பிரட்டி எடுத்து அதனை மீண்டும் மைதா மாவு கலவையில் நனைத்து மீண்டும் பிரட் கிராம்ஸில் போட்டு பிரட்டி எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 6
பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி அதில் நாம் தயார் செய்து வைத்துள்ள உருண்டைகளை போட்டு நன்கு பொறித்து கொள்ளுங்கள்.
இப்பொழுது நமது Crispy Raw Banana Balls தயாராகி விட்டது வாங்க சுவைக்கலாம். நீங்களும் இந்த Crispy Raw Banana Ball ரெசிபியை உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |