தீபாவளி ஸ்பெஷல் சின்ன வெங்காய சாம்பார் இப்படி செய்து பாருங்கள் தீபாவளியே களைகட்டும் பாருங்கள்?

Advertisement

Deepavali Special Navaratna Sambar in Tamil

நண்பர்களே வணக்கம் இன்றைய சமையல் குறிப்பில் தீபாவளியை முன்னிட்டு அனைத்துமே புதியது போல் இருக்கும். அதேபோல் வீட்டில் நிறைய விதமான சுவையில் பலகாரம் செய்வார்கள். முக்கியமான இட்லி தோசை செய்வது வழக்கம் ஆனால் தீபாவளி என்றாலே நமக்கு ஸ்பெஷல் தான் அப்படி இருக்கும் பட்சத்தில் தினமும் ஒரேமாதிரியான சாம்பார் செய்வது கொஞ்சம் போர் அடிக்கும் அதனால் தீபாவளி அன்று இந்த மாதிரியான நவரத்தன சாம்பார் செய்து சாப்பிட்டு பாருங்கள் சுவை அள்ளும் வாங்க அந்த சாம்பார் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்..!

நவரத்தின சாம்பார் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

  1. துவரம் பருப்பு – 1/2 கப்
  2. சின்னவெங்காயம் – 1/4
  3. தக்காளி – 2
  4. பூண்டு – 3 பல்
  5. சின்ன வெங்காயம் – 2
  6. கருவேப்பிலை – சிறிதளவு
  7. சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்
  8. உப்பு – தேவையான அளவு
  9. பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்
  10. கொத்தமல்லி இலை – சிறிதளவு
  11. கடுகு – 1/2 டீஸ்பூன்
  12. எண்ணெய் – தேவையான அளவு
  13. முருங்கைக்காய் – 1 அல்லது 2
  14. உருளைக்கிழங்கு – 2
  15. பரங்கிக்காய் – 1/4 கிலோ
  16. இதில் உங்களுக்கு என்ன காய்கறி பிடிக்குதோ அதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.

நவரத்தின சாம்பார் செய்வது எப்படி?

ஸ்டேப்: 1

முதலில் குக்கரை எடுத்துக்கொள்ளவும் அதில் துவரம்பருப்பை கழுவி அதில் சேர்க்கவும். அதனுடன் சின்னவெங்காயம் 3 பூண்டு பல் சேர்த்து 1 1/2 கப் அளவுக்கு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வேகவைக்க வேண்டும். 5 முதல் 6 விசில் வரை நன்கு வேக விடமும்.

ஸ்டேப்: 2

பின்பு வேறு ஒரு பாத்திரத்தில் காய் வதங்கும் அளவுக்கு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு மற்றும் கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். அதில் சின்ன வெங்காயத்தை போட்டு அதனையும் சேர்த்து வதக்கி கொள்ளவும்.

ஸ்டேப்: 3

பின்பு தாளித்த பொருட்களுடன் காய்கறியையும் போட்டு வதக்கவும். இதனுடன் காய்கறி வேகும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி கொத்திக்க விடவும்.

ஸ்டேப்: 4

இப்போது பருப்பு விசில் வந்திருக்கும் அதனை பின் அதனை திறந்து பருப்பை நன்கு மசித்துவிட்டு அதில் சாம்பார் பொடியை சேர்க்கவும்.

அதன் பின் அதில் உப்பு பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து கலந்துவிடவும். பிறகு கொதித்த காய்கறியை அந்த தண்ணீரோடு சேர்க்கவும்.

தேவைப்பட்டால் அதில் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். இந்த கலவை மீண்டும் 5 முதல் 10 நிமிடம்  கொதிக்க விடவும்.

கொதித்த பின் கடைசியாக கொத்தமல்லித்தழை தூவி சூடான இட்லி தோசைக்கு சேர்த்து சாப்பிட்டு பாருங்கள் தீபாவளியே களைகட்டும்..!🧨🎈🎉

ஹோட்டல் சுவையில் சாம்பார் செய்வது எப்படி?

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement