சுவையான தம்ரூட் அல்வா செய்யலாம் வாங்க..!

Dumroot Halwa Recipe

தம்ரூட் அல்வா செய்வது எப்படி | Dumroot Halwa Recipe in Tamil 

Dumroot Halwa Recipe: அல்வா என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று. அல்வாவில் வாழைப்பழ அல்வா, கேரட் அல்வா, பீட்ரூட் அல்வா, கோதுமை அல்வா இது போன்ற பல வகையான அல்வா வகைகள் உள்ளன. நம்முடைய பொதுநலம்.காம் பதிவில் இன்று தம்ரூட் அல்வா எப்படி செய்யலாம், அதற்கு தேவையான பொருள் என்னென்ன வேண்டுமென்பதை தெரிந்துக்கொள்ளுவோம்..!

வீட்டிலே ஐந்தே நிமிடத்தில் பிரெட் அல்வா செய்வது எப்படி

தம்ரூட் அல்வா செய்ய – தேவையான பொருள்:

 1. பால் – 2 கப் 
 2. ஜீனி – 2 1/2 கப் 
 3. ஏலக்காய் – 1
 4. ரவா – 1/2 கப் 
 5. முந்திரி பருப்பு 
 6. தோல் நீக்கிய பாதாம் பருப்பு – 25 கிராம் 
 7. நெய் – 3/4 கப் 
 8. எண்ணெய் – 1/4 கப் 
 9. கடலை பருப்பு – 1/2 கப் 
 10. சிவப்பு நிற கலர் பவுடர்
 11. சூடான பால் – 3 டேபிள் ஸ்பூன் 
 12. பூஸ்ட் – 2 1/2 டேபிள் ஸ்பூன் 

செய்முறை விளக்கம்:

ஸ்டேப் 1: முதலில் பவுலில் தோல் நீக்கிய பாதாம் பருப்பினை சிறிதளவு தண்ணீர் சேர்த்து 4 மணிநேரம் ஊறவைக்கவும்.

ஸ்டேப் 2: அடுத்து வேறு ஒரு பாத்திரத்தில் கடலை பருப்பினை நன்கு அலசிய பிறகு 2 கப் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.

ஸ்டேப் 3: நன்றாக வெந்த பிறகு நீரினை வடிகட்டி அந்த பருப்பினை ஆறவைக்கவும். நன்றாக ஆரிய கடலை பருப்பினை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் 25 கிராம் அளவு முந்திரி பருப்பினை சேர்க்கவும்.

ஸ்டேப் 4: அடுத்ததாக தோல் நீக்கிய பாதாம் பருப்பினையும் இதில் சேர்க்கவும். அதனுடன் ஏலக்காய் 1 சேர்க்கவும்.

ஸ்டேப் 5: இப்போது தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த பிறகு சிறிது அளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் தனியாக எடுத்துக்கொள்ளவும். 

ஸ்டேப் 6: அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் 2 கப் அளவிற்கு பால் சேர்க்கவும். கடாயை சூடு படுத்தி பாலை நன்றாக காய்ச்சிக்கொள்ளவும். அடுத்து ஒரு கடாயில் ரவாவினை 3 அல்லது 4 நிமிடம் வரை மிதமான சூட்டில் வறுக்கவும். 

ஸ்டேப் 7: வறுத்த ரவாவினை ஆறவைக்கவும். மிதமான சூட்டில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து காய்ச்சிய பாலை ஊற்றவும். காய்ச்சிய பாலில் ஆற வைத்துள்ள ரவாவை சேர்த்து மிக்ஸ் செய்யவும்.

ஸ்டேப் 8: அடுத்து 2 1/2 கப் அளவிற்கு ஜீனியை சேர்க்கவும். ஜீனி சேர்த்த பிறகு அரைத்து வைத்துள்ள விழுதினை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.

ஸ்டேப் 9: விருப்பம் உள்ளவர்கள் கலர் பவுடரை கொஞ்சமாக சேர்த்துக்கொள்ளவும். சேர்த்த பிறகு கரண்டியால் நன்றாக கிளறவும். அடுத்து 1/4 கப் அளவிற்கு எண்ணெய் சேர்த்து கிளறவும்.

நாவில் கரையும் வாழைப்பழ அல்வா

ஸ்டேப் 10: இப்போது நெய் 3/4 அளவிற்கு சேர்த்து கிளறவும். அடுத்து ஒரு தனி பவுலில் 3 டேபிள் ஸ்பூன் அளவிற்கு சூடான பால் சேர்த்து அதனுடன் பூஸ்ட் (boost) 2 1/2 டேபிள் ஸ்பூன் அளவு சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும்.

ஸ்டேப் 11: இப்போது பூஸ்ட் கரைத்ததை அல்வாவுடன் சேர்த்து கைவிடாமல் கிளறவும். கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கிளறிவிட வேண்டும். 

ஸ்டேப் 12: பாத்திரத்தில் ஒட்டாத அளவுக்கு வரும் வரை கிளறிவிட வேண்டும். அடுத்து தம் போடுவதற்கு சிறிய வட்டா போன்று எடுத்துக்கொள்ளவும்.

ஸ்டேப் 13: சிறிய பாத்திரம் எடுத்து அதில் நெய் தடவி கொள்ளவும். அந்த பாத்திரத்தில் அல்வாவினை 2 இன்ச் அளவிற்கு வைத்துக்கொள்ளவும். அல்வாவின் மேல் முந்திரி பருப்பினை தூவிவிட வேண்டும்.

ஸ்டேப் 14: அடுத்ததாக அந்த பாத்திரத்தில் மூடி போட்டு அதன் மேல் தம் போட நெருப்பு வைக்கவும். 

ஸ்டேப் 15: நெருப்புமட்டும் சேர்த்து தம்மில் போட முடியாததனால் ஒரு ஓவன் பாத்திரத்தில் கொஞ்சமாக நெய் தடவிக்கொள்ளவும்.

ஸ்டேப் 16: நெய் தடவிய பாத்திரத்தில் அல்வாவினை சேர்க்கவும். அதில் முந்திரி பருப்பினை சேர்க்கவும். அடுத்து லேசான சூட்டில் வைத்து முந்திரியானது ப்ரவுன் நிறத்தில் வரும் வரை ஓவனை வைக்கவும். 

ஸ்டேப் 17: சூப்பரான தம்ரூட் அல்வா ரெடி. நீங்களும் வீட்டில் செய்து ட்ரை பண்ணுங்க. 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்