ஈஸியா ஸ்நாக்ஸ் செய்வது எப்படி.?
வணக்கம் அன்பு நண்பர்களே..! வீட்டில் இருக்கும் போது மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் மற்றும் ஒரு கப் டீ குடித்தால் அப்படி இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். ஸ்நாக்ஸ் என்றாலே வடை, போண்டா, சம்சா, பக்கடா, சுண்டல் போன்றவை செய்து கொடுப்பீர்கள். ஒரே மாதிரியான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் உங்களுக்கு போர் அடித்துவிடும், சாப்பிடுபவர்களுக்கும் போர் அடித்துவிடும். புதிதாகவும் வித்தியாசமாகவும் ஒரு ஸ்நாக்ஸ் செய்து சாப்பிடுவோம். அப்படி என்ன வித்தியாசமான ஸ்நாக்ஸ் என்று யோசிப்பீர்கள்..! இட்லி வைத்து ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று படித்து தெரிந்துகொள்வோம் வாங்க..
இதையும் படியுங்கள் ⇒ 10 நிமிடத்தில் மீந்துபோன சாதத்தை வைத்து சூப்பரான மாலை நேர ஸ்னாக்ஸ் செய்து பாருங்கள்
ஸ்நாக்ஸ் செய்ய தேவையான பொருட்கள்:
- இட்லி -4
- பெரிய வெங்காயம் -2
- தக்காளி -2
- பூண்டு -4 பல்
- பச்சை மிளகாய் -1
- மிளகாய் தூள் -1/2 தேக்கரண்டி
- கரம் மசாலாத்தூள் -1/4 தேக்கரண்டி
- தக்காளி சாஸ் -1 சிறிதளவு
- இட்லிப்பொடி -1 தேக்கரண்டி
- கொத்தமல்லி இலை -தேவையான அளவு
- கறிவேப்பிலை -தேவையான அளவு
- உப்பு -தேவையான அளவு
- எண்ணெய் -தேவையான அளவு
ஸ்நாக்ஸ் செய்முறை:
ஸ்டேப்:1
முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு போன்றவற்றை சிறியதாக நறுக்கி கொள்ளவும். பிறகு 4 இட்டலியையும் உங்களுக்கு விருப்பப்பட்ட வடிவத்தில் நறுக்கி வைத்து கொள்ளவும்.
ஸ்டேப்:2
முதலில் அடுப்பை பற்ற வைத்து கடாயை வைக்க வேண்டும். அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் நறுக்கி வைத்த இட்லியை பொரித்தெடுக்கவும். குறைந்த தீயிலே வைத்து பொரித்தெடுக்கவும்.
ஸ்டேப்:3
பின் கடாயில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறம் வந்தவுடன் நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
ஸ்டேப்:4
பிறகு தேவையான் அளவு கரம் மசாலா, மிளகாய்தூள், தக்காளி சாஸ் சேர்த்து வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
ஸ்டேப்:5
பின் பொரித்து வைத்த இட்லி துண்டு சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவும். பின் இட்லி போடி மற்றும் சிறிதளவு கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும். சில நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விட வேண்டும். அவ்ளோ தாங்க சுவையான இட்லி ஸ்நாக்ஸ் ரெடி..! ருசித்து பாருங்கள்..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |