புரட்டாசி மாத ஸ்பெஷல் எள்ளு சாதம் இப்படி செய்து பாருங்கள்..!

Advertisement

Ellu Sadam Recipe in Tamil..! 

வணக்கம் பொதுநலம்.காம் பதிவின் இனிமையான நண்பர்களே… இன்றைய பதிவில் புரட்டாசி மாதத்தில் செய்யக்கூடிய ஸ்பெஷலான பெருமாளுக்கு மிகவும் பிடித்த எள்ளு சாதம் எப்படி செய்வது என்பதை பற்றி தான் பார்க்கப் போகிறோம். புரட்டாசி மாதம் வந்துவிட்டாலே அனைத்து வீடுகளிலும் சனிக்கிழமை விசேஷமாக தான் இருக்கும்.

அதுபோல சனிக்கிழமைகளில் எள்ளு சாதம் செய்து அசத்துங்கள். எள்ளு சாதம் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். கோவில்களில் தரக்கூடிய ருசியான எள்ளு சாதத்தை நாம் நமது வீட்டிலேயே செய்து அசத்தலாம். வாங்க நண்பர்களே ருசியான எள்ளு சாதம் செய்வது எப்படி என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

எள்ளு பொடி செய்ய தேவையான பொருட்கள்: 

  1. எள்ளு – 4 டீஸ்பூன்
  2. உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
  3. கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
  4. வர மிளகாய் – 6
  5. தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்

எள்ளு சாதம் செய்ய தேவையான பொருட்கள்: 

  • நெய் – 2 ஸ்பூன்
  • கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
  • உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
  • கடுகு – 1 ஸ்பூன்
  • வேர்க்கடலை – சிறிதளவு
  • முந்திரி பருப்பு – 10
  • காய்ந்த மிளகாய் – 2
  • எண்ணெய் – தேவையான அளவு
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • உப்பு – தேவையான அளவு
  • அரைத்து வைத்துள்ள எள்ளு பொடி

எள்ளு சாதம் செய்முறை: 

எள்ளு சாதம்

செய்முறை -1

முதலில் ஒரு கடாயை எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் எண்ணெய் சேர்க்காமல் கடலைப்பருப்பு, எள்ளு, உளுத்தம் பருப்பு, மிளகாய், தேங்காய் துருவல் போன்ற பொருட்களை எல்லாம் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்.

பின் வறுத்த இந்த பொருட்களை நன்றாக ஆறவிட்டு பொடியாக அரைத்து கொள்ள வேண்டும்.

செய்முறை -2

இப்போது கடாயில் எண்ணெய் தேவையான அளவு ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடான பிறகு அதில் தேவையான அளவு உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கடுகு, பெருங்காயத்தூள், முந்திரி பருப்பு, வேர்க்கடலை, வர மிளகாய், கருவேப்பிலை போன்ற பொருட்களை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

செய்முறை -3

பின் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். பின் நாம் வடித்து வைத்துள்ள சாதத்தை இதில் சேர்த்து அதனுடன் நாம் அரைத்து வைத்துள்ள எள்ளு பொடியை சேர்த்து நன்றாக கிளறவேண்டும். கடைசியாக 2 ஸ்பூன் நெய் சேர்த்து நன்றாக கிளறவேண்டும்.

அவ்வளவு தான் மிகவும் ருசியான சத்தான எள்ளு சாதம் ரெடி… இதுபோல எள்ளு சாதம் நீங்களும் செய்து சாப்பிடுங்கள்..! 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement