Garam Masala Podi Seivathu Eppadi..!
வணக்கம் பொதுநலம் பதிவின் அன்பான நண்பர்களே… இன்றைய சமையல் குறிப்பு பதிவில் வீட்டிலேயே கரம் மசாலா பொடி செய்வது எப்படி.? என்று தான் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். நாம் உண்ணும் உணவில் சுவையை அதிகரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களில் இந்த கரம் மசாலாவும் ஓன்று.
இந்த கரம் மசாலாவை நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம். வீட்டில் தயாரிக்கும் இந்த மசாலாவை நீண்ட நாட்கள் சேமித்தும் வைத்துக் கொள்ளலாம். அது எப்படி தயாரிப்பது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க…
இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ சாட் மசாலா பொடி செய்வது எப்படி?
கரம் மசாலா செய்வது எப்படி..?
தேவையான பொருட்கள்:
- மிளகு – 1 டீஸ்பூன்
- சீரகம் – 1 டீஸ்பூன்
- ஏலக்காய் – 6
- காய்ந்த மிளகாய் – 3
- தனியா – 3 டேபிள் ஸ்பூன்
- பட்டை – 5
- கிராம்பு – 15
- ஏலக்காய் –
- அன்னாசி பூ – 2
- ஜாதி பத்திரி – 2
- பிரியாணி இலை – 2
- மராத்தி மொக்கு – 2
- லவங்கம் – 4
கரம் மசாலா பொடி செய்முறை:
ஸ்டெப் -1
முதலில் மிளகு – 1 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், ஏலக்காய் – 6, காய்ந்த மிளகாய் – 3, தனியா – 3 டேபிள் ஸ்பூன்,பட்டை – 5, கிராம்பு – 1, ஏலக்காய், அன்னாசி பூ – 2, ஜாதி பத்திரி – 2, பிரியாணி இலை – 2, மராத்தி மொக்கு – 2 , லவங்கம் – 4 போன்ற பொருட்களை வெயிலில் 2 மணி நேரம் காய வைக்க வேண்டும்.
ஸ்டெப் -2
ஒரு கடாயை நன்றாக சூடுபடுத்தி கொள்ள வேண்டும். பின் கடாயில் சோம்பு , தனியா , மிளகு , சீரகம் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வறுத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் -3
பின் அதே கடாயில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, ஜாதிபத்திரி, மராத்தி மொக்கு, பிரியாணி இலை மற்றும் லவங்கம் சேர்த்து தனியாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் -4
பின் இந்த பொருட்களை எல்லாம் ஒரு தட்டில் வைத்து ஆற வைக்க வேண்டும். இவை ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ள வேண்டும்.
அவ்வளவு தான் கரம் மசாலா பொடி தயார்..! அரைத்த இந்த மசாலாவை ஒரு காற்று புகாத பாட்டிலில் சேமித்து வைத்து கொள்ளலாம்..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |