Stuffed Wheat Rolls Recipe in Tamil..!
வணக்கம் அன்பான நண்பர்களே… நாம் தினமும் காலையில் வேலைக்கு செல்லும் அவசரத்தில் சரியாக உணவு கூட சாப்பிடுவதை கூட மறந்து விடுகிறோம். சிலர் காலை பொழுதில் விரைவில் செய்ய கூடிய உணவுகளையே சாப்பிடுகிறார்கள். தினமும் ஒரே உணவான இட்லி மற்றும் தோசை சாப்பிடுவதால் என்ன பயன் இருக்கிறது.
தினமும் இட்லி தோசை என்று சாப்பிடும் நீங்கள் இந்த ரெசிபி செய்து சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு ருசியாக இருக்கும். வாங்க நண்பர்களே கோதுமை மாவை வைத்து சத்தான மற்றும் ருசியான கோதுமை மாவு வெஜ் ரோல் செய்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
கோதுமை மாவு வெஜ் ரோல் செய்வது எப்படி..?
தேவையான பொருட்கள்:
- கோதுமை மாவு – 1 கப்
- வெங்காயம் – 2
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்
- கேரட் – 3
- தக்காளி – 2
- மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
- மல்லித்தூள் – அரை டீஸ்பூன்
- கர மசாலா – அரை டீஸ்பூன்
- புதினா இலை – சிறிதளவு
- எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
கோதுமை மாவு வெஜ் ரோல் செய்முறை:
செய்முறை -1
முதலில் ஒரு கப் கோதுமை மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.
செய்முறை -2
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்ற வேண்டும்.
பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு அதனுடன் 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பிறகு வெங்காயம் நன்றாக பொன்னிறமாக வதங்கிய பின்னர் அதில் நாம் நறுக்கி வைத்துள்ள கேரட் -யை சேர்த்து கொள்ள வேண்டும். இதனுடன் சிறிதளவு புதினா இலையை சேர்த்து வதக்க வேண்டும்.
செய்முறை -3
கேரட் நன்றாக வதங்கிய பின்னர் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின் மூடி போட்டு 5 நிமிடம் நன்றாக வேக விட வேண்டும்.
செய்முறை -4
தக்காளி நன்றாக வெந்த பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் கர மசாலா சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விட வேண்டும்.
செய்முறை -5
அடுத்ததாக நாம் பிசைத்து வைத்துள்ள கோதுமை மாவை சிறிய அளவில் சப்பாத்தி போல தேய்த்து கொள்ள வேண்டும். சப்பாத்தி போல ஒரே அளவில் தேய்த்து கொள்ள வேண்டும்.
பின் அதில் நாம் செய்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து ரோல் செய்து கொள்ள வேண்டும்.
பின் அதை ஒரு இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவைக்க வேண்டும்.
அவ்வளவு தான்… மிகவும் ருசியான கோதுமை மாவு வெஜ் ரோல் ரெடி..! நீங்களும் இதை செய்து சாப்பிட்டு பாருங்கள்..!
1 கப் கோதுமை மாவு இருந்தால் போதும் நீங்களும் செய்து அசத்தலாம்..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |