Godhumai Maavu Recipe Tamil
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய சமையல் குறிப்பு பதிவில் கோதுமை மாவு மட்டும் வைத்து மிகவும் சுவையான மசாலா வடை செய்வது எப்படி என்று தான் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த வடையை நீங்கள் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். இந்த கோதுமை மாவில் செய்யும் மசாலா வடையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த மசாலா வடை செய்வது மிகவும் சுலபம். அதுபோல இந்த மசாலா வடையை சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
கோதுமை மாவு, மைதா மாவு இல்லாமல் சூப்பரான மசாலா பூரி செய்வது எப்படி வாங்க தெரிந்துகொள்ளலாம்..! |
கோதுமை மசாலா வடை செய்வது எப்படி..?
தேவையான பொருட்கள்:
- கோதுமை மாவு – 1 கப்
- மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
- எண்ணெய் – தேவையான அளவு
- தண்ணீர் – தேவையான அளவு
மசாலா செய்ய தேவையான பொருட்கள்:
- சீரகம் – 1 ஸ்பூன்
- வெங்காயம் – 3
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்
- கருவேப்பிலை – 1 கொத்து
- மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
- மல்லித்தூள் – 1 ஸ்பூன்
- சிக்கன் மசாலா – 1 ஸ்பூன்
- கரமசாலா – 1 ஸ்பூன்
- கடலைமாவு – 2 ஸ்பூன்
- கொத்தமல்லி – 1 கொத்து
- உப்பு – தேவையான அளவு
இந்த மாதிரி செய்து கொடுத்தால் கோதுமை தோசை வேண்டாம் என்றே சொல்ல மாட்டார்கள்.! |
கோதுமை மசாலா வடை செய்முறை:
செய்முறை -1
முதலில் ஒரு கிண்ணத்தில் 1 கப் கோதுமை மாவை எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் அரை ஸ்பூன் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் அதனுடன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
செய்முறை -2
பின் அதில் 1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பிசைய வேண்டும். பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு போல பிசைந்து 10 நிமிடங்கள் அப்படியே மூடி வைக்க வேண்டும்.
செய்முறை -3
பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம் கருவேப்பில்லை போட்டு வதக்க வேண்டும்.
பிறகு அதில் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும்.
செய்முறை -4
வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய உடன் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
பின் மிளகாய் தூள், மல்லித்தூள், கரமசாலா மற்றும் சிக்கன் மசாலா போட்டு அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
செய்முறை -5
பின் அதில் கடலைமாவு 2 ஸ்பூன் போட்டு நன்றாக வதக்க வேண்டும். பின் அதில் கொத்தமல்லி போட்டு இரக்க வேண்டும்.
செய்முறை -6
பின் நாம் பிசைந்து வைத்துள்ள கோதுமை மாவை சப்பாத்தி போல உருட்டி கொள்ள வேண்டும்.
பின் அதை ஒரு குறிப்பிட்ட அளவில் தேய்க்க வேண்டும். பின் அதில் நாம் செய்த மசாலாவை உள்ளே வைத்து வடை போல மடித்து கொள்ள வேண்டும்.
செய்முறை -7
பிறகு ஒரு கடாயில் போதுமான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் நாம் உருட்டி வைத்துள்ள வடைகளை போட்டு பொறிக்க வேண்டும். வடை பொன்னிறமாக வந்தவுடன் எடுத்து மற்றவர்களுக்கு பரிமாற வேண்டும்.
அவ்வளவு தான் நண்பர்களே… அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய கோதுமை மசாலா வடை தயார்..!
மழைகாலத்தில் உடலுக்கும் மனதுக்கும் அமைதி தரக்கூடிய கோதுமை சமோசா இப்படி செய்து பாருங்கள்..! |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |