திராட்சையை வைத்து இவ்வளவு ருசியான ரெசிபி செய்யலாமா..? இத்தனை நாளா இது தெரியாம போச்சே..!

Grape Pudding Recipe in Tamil

பொதுவாக கோடை காலம் வந்து விட்டாலே குழந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். அப்படி விடுமுறையில் வீட்டில் உள்ள குழந்தைகள் தினமும் ஏதாவது புதிய புதிய ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று பிடிவாதம் பண்ணுவார்கள். அப்பொழுது உங்களுக்கு என்ன புதிய ஸ்னாக்ஸ் செய்து தருவது மற்றும் அது அவர்களது உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்க கூடாது என்ற எண்ணம் இருக்கும்.

அதனால் தான் இன்றைய பதிவில் திராட்சையை பயன்படுத்தி மிகவும் ஆரோக்கியமான மற்றும் அருமையான சுவையில் ஒரு ஃபுட்டிங் ரெசிபியை தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து திராட்சை ஃபுட்டிங் எவ்வாறு செய்வது என்பதை அறிந்து கொண்டு. இதனை உங்களின் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Grape Dessert Recipe in Tamil:

Grape Dessert Recipe in Tamil

திராட்சையை பயன்படுத்தி மிகவும் ஆரோக்கியமான மற்றும் அருமையான சுவையில் ஒரு ஃபுட்டிங் ரெசிபியை பற்றி விரிவாக இங்கு பார்க்கலாம் வாங்க. முதலில் இதற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.

  1. திராட்சை – 2 கப் 
  2. தண்ணீர் – 3 கப் 
  3. சோளமாவு – 1/4 கப் 
  4. சர்க்கரை – 1/2 கப் 
  5. டூட்டி ஃப்ரூட்டி – 1 கைப்பிடி அளவு 

செய்முறை:

ஸ்டேப்- 1

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 2 கப் திரட்சையை நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் சுத்தம் செய்து வைத்துள்ள திராட்சையை சேர்த்து அதனுடன் 3 கப் தண்ணீரை ஊற்றி நன்கு வேக வைத்து எடுத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 2 

பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள். பிறகு அதில் உள்ள சாற்றினை மட்டும் ஒரு கிண்ணத்தில் வடிகட்டி கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ உங்க வீட்ல பிரட் இருக்கா அப்போ கோடை காலத்திற்கு ஏற்ற குளுகுளு குல்ஃபியை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்

ஸ்டேப்- 3

அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் அரைத்து வடிகட்டி வைத்துள்ள சாற்றினை சேர்த்து கொள்ளுங்கள். பிறகு அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1/4 கப் சோள மாவினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 4

பிறகு அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 1/2 கப் சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இப்பொழுது அது நன்கு கெட்டியாக மாறி இருக்கும். பின்னர் அதனை ஒரு கிண்ணத்தில் ஊற்றி அதன் மீது நாம் எடுத்து வைத்துள்ள 1 கைப்பிடி அளவு டூட்டி ஃப்ரூட்டியை தூவி குளிர் சாதன பெட்டியில் உள்ள உரைப்பானில் 2 மணிநேரம் வைத்து எடுத்தால் நமது திராட்சை ஃபுட்டிங் தயாராகிவிடும். பின்னர் அதனை அனைவருக்கும் பரிமாறுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ இனிமேல் ஆரஞ்சு பழத்தோலை தூக்கியெறியாமல் இந்த ரெசிபியை ஒருமுறை செய்து சுவைத்து பாருங்கள்

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal