குலாப் ஜாமுன் செய்வது எப்படி? | Gulab Jamun Recipe Tamil
Gulab Jamun Recipe Tamil – ஹாய் ப்ரண்ட்ஸ் வணக்கம்.. தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கும்.. உங்கள் வீட்டில் என்ன ஸ்விட் செய்யப்போறீங்க.. இன்னும் அதை இப்பதி எந்த ஒரு ஐடியாவும் இல்லையா.. அப்படின்னா நான் ஒரு ஐடியா தாரன் அது ஒன்னும் இல்லங்க சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய குலாப் ஜாமுன் செய்யுங்களேன்.. இருந்தாலும் குலாப் ஜாமுன் செய்தால் விரிசல் வருது, சரியான டெஸ்டில் குலாப் ஜாமுன் வர வில்லையா? அப்படி என்றால் கவலையை விடுங்க. இங்கு சொல்ல பட்டிருக்கும் பக்குவத்தில் குலாப் ஜாமுன் பண்ணுங்கள்.. கண்டிப்பாக ஒரு உருண்டையில் கூட விரிசல் வராது மற்றும் சுவையும் அருமையாக இருக்கும். சரி வாங்க அது எப்படி செய்யலாம் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.
குலாப் ஜாமுன் செய்ய தேவையான பொருட்கள்:
- குலாப் ஜாமுன் மாவு – 1/2 கிலோ
- ஜீனி – 1/2 கிலோ
- தண்ணீர் – 700 மில்லி
- ஏலக்காய் தூள் – ஒரு சிட்டிகை
- நெய் – தேவையான அளவு
- எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன்
- தயிர் – இரண்டு ஸ்பூன்
- பால் – தேவையான அளவு
- எண்ணெய் – 1/2 லிட்டர்
குலாப் ஜாமுன் செய்முறை – Gulab Jamun Recipe Tamil:
ஸ்டேப்: 1
1/2 கிலோ குலாப் ஜாமுன் மாவை நன்றாக சலித்துக்கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 2
பிறகு அதில் இரண்டு ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள், பிறகு குளிர்ச்சியாக இருக்கும் பாலை இவற்றில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பிசைய வேண்டும்.
ஸ்டேப்: 3
மாவானது ரொம்பவும் கெட்டியாக இருக்க கூடாது, அதேபோல் தண்ணியாகவும் இருக்க கூடாது. அதேபோல் சப்பாத்தி மாவுக்கு பிசைவதுபோலும் இருக்க கூடாது. மேல் படத்தில் காட்டியுள்ளது போல் பிசைந்துகொள்ளுங்கள்.
ஸ்டேப்: 4
இறுதியாக நெய் அல்லது எண்ணெய் சிறிதளவு எடுத்து பிசைந்த மாவின் மீது அப்ளை செய்யுங்கள். பிறகு 10 நிமிடம் வரை காத்திருங்கள்.
ஸ்டேப்: 5
அதற்குள் நாம் ஜீரா தயார் செய்துவிடுவோம். அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து அவற்றில் 700 மில்லி தண்ணீர் சேர்க்கவும், தண்ணீர் நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து 1/2 கிலோ ஜீனியை அவற்றில் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள் ஜீனி நன்கு கரைந்து ஓரளவு பிசுபிசுப்பு தன்மை வரும்போது அவற்றில் ஒரு ஸ்பூன் ஏலக்காய் தூள், இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து நன்றாக கலந்துவிடுங்கள். பிறகு 3 முதல் 5 நிமிடங்கள் கொதிக்கட்டும். பிறகு அடுப்பை அணைத்துவிடலாம்.
ஸ்டேப்: 6
அடுத்ததாக பிசைந்து வைத்த குலாப் ஜாமுன் மாவை ஏசுத்து சிறு சிறு உருண்டைகளாக ரோமன் அழுத்தம் கொடுக்காமல் உருட்டிக்கொள்ளுங்கள். உருண்டையை உருடுவதற்கு முன் உங்கள் இரண்டு உள்ளங்கையிலும் நெய் அல்லது எண்ணெய் எதாவது ஒன்றை தடவி கொண்டு உருட்டுங்கள் இப்படி செய்வதால் மாவு கையில் ஒட்டாமல் வரும்.
ஸ்டேப்: 7
அடுத்ததாக அடுப்பில் இன்னொரு கடாய் வைத்து அவற்றில் உருண்டைகளை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். எண்ணெய் சூடானது அடுப்பை மிதமான தீயில் வைத்து உருட்டி வைத்த உருண்டைகளை அவற்றில் சேர்க்கவும் ஒரு 3 நிமிடம் வரை அப்படியே இருக்கட்டும், பிறகு சாரணியை பயன்படுத்து மெதுவாக கிளறிவிடுங்கள்.
ஸ்டேப்: 8
ஸ்டேப்: 9
ஓரளவு வெந்ததும் சாரணியின் பின்புறத்தை பயன்படுத்தி தோசை ஊற்றுவது போல உருண்டைகள் மீது அழுத்தம் கொடுக்காமல் உருட்டிவிடுங்கள். இப்படி செய்வதன் மூலம் உருண்டை எல்லா பக்கமும் வெந்துவிடும்.
ஸ்டேப்: 10
உருண்டை நன்கு சிவந்து பிரவுன் கலர் வரும் வரை பொரிக்கவும் பிறகு எண்ணெயில் இருந்து எடுத்து சிறிது நேரம் ஆறவைக்கவும் பிறகு ஜீராவில் சேர்த்து 2 மணிநேரம் நன்கு ஊறவிடவும். 2 மணி நேரம் கழித்து அனைவருக்கும் பரிமாறுங்கள். சுவை மிகவும் அருமையாக இருக்கும்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal kurippu tamil |