சுவையான ஆல்வா வீட்டுலேயே சுலபமாக செய்யலாம் வாங்க.

பாம்பே அல்வா

வணக்கம் நண்பர்களே இன்று நம் சமையல் பதிவில் சுவையாக மிகவும் எளிதாக வீட்டிலே பாம்பே அல்வா செய்யலாம். பொதுவாகாவே  நாம் எவ்வளவோ அல்வா வகைகளை சாப்பிட்டு இருந்திருப்போம். அந்தவகையில் வீட்டில் வரும் விசேஷ நாட்களில் இந்த அல்வாவை செய்து அசத்தி பாருங்கள், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். அந்தவகையில் மிகவும் எளிதாக பத்தே நிமிசத்தில் இந்த அல்வாவை செய்து அசத்தலாம் வாங்க.

நவராத்திரி ஸ்பெஷல் பீட்ருட் பாயாசம். நீங்களும் செய்து ருசித்து பாருங்கள்.

பாம்பே ஆல்வா செய்வதற்கு தேவையான பொருட்கள்:

  • சோளமாவு- 100 கிராம்
  • வெள்ளை சர்க்கரை – 400 கிராம்
  • நெய்- 5 ஸ்பூன்
  • ஏலக்காய் பொடி- 1 ஸ்பூன் 
  • கலர் பொடி – 1/4 ஸ்பூன் 
  • எலுமிச்சை சாறு- 1/4 ஸ்பூன் 
  • உடைத்த முந்திரி- ஒரு கைப்பிடி அளவு
  • துருவிய பாதம், பிஸ்தா- சிறிதளவு

பாம்பே ஆல்வா செய்முறை:

அல்வா செய்வது எப்படி

ஸ்டேப்:1

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொண்டு அதில் அந்த சோளமாவை சேர்த்து 2 கப் அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவேண்டும். அடுத்ததாக அடுப்பில் மிதமான சூட்டில் சர்க்கரையை வைத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கலக்கி கொள்ளவேண்டும்.

ஸ்டேப்:2

அடுத்ததாக சர்க்கரை கொஞ்சம் பாவு பதம் வரும் வரை கலக்கி விடவும். சர்க்கரை கொத்தித்து நுரை வந்ததும், கரைத்து வைத்த சோளமாவை இன்னொரு முறை கலக்கி கொண்டு அதை அந்த சர்க்கரை பாவில் கலந்து கொன்டே இருக்கவேண்டும்.

ஸ்டேப்:3

கையை எடுக்காமல் கலக்கி கொண்டே இருக்கவேண்டும், அதன் பிறகு அதில் எலுமிச்சை சாறு மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்துக்கொண்டு மீண்டும் கலக்கி விடவேண்டும்.

ஸ்டேப்:4

கலந்த பிறகு கெட்டி பதம் வந்ததும் கொஞ்சம் கலர் பவுடர் சேர்த்து கலக்கி விட வேண்டும். கலர் பவுடர் சேர்த்ததும், கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கலக்கி கொண்டே இருக்கவேண்டும், நெய் சேர்ப்பதால் வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.

ஸ்டேப்:5 

அல்வாவை கலந்த பிறகு உடைத்து வைத்த முந்திரியை சேர்த்து நன்றாக கலக்கிய பிறகு, அடுப்பை அணைக்க வேண்டும். அதன் பிறகு ஒரு சதுர வடிவில் ஒரு தட்டோ அல்லது ட்ரே இருந்தால் அதில் நெய்யை தடவி, துருவி வைத்த பாதம், பிஸ்தாவை அதில் முழுவதும் தூவி கொண்டு, செய்து வைத்திருந்த அல்வாவை அதில் சேர்க்கவும்.

ஸ்டேப்:6

சேர்த்த பிறகு நன்றாக தடவி கொண்டு அதை ஆறவைக்கவும், ஆறின பிறகு ஒரு தட்டில் கவுத்து போட்டு அதை சின்ன சின்ன பிசாக கட் செய்து சுவைக்கலாம். நீங்களும் இனிமேல் இந்த அல்வாவை செய்து சுவைத்து வாருங்கள்.

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal