வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இட்லி, தோசைக்கு இந்த சட்னி செய்து பாருங்க.!

Updated On: March 20, 2023 1:15 PM
Follow Us:
Hotel Style Kara Chutney in Tamil
---Advertisement---
Advertisement

Hotel Style Kara Chutney in Tamil

இட்டலி, தோசைக்கு சட்னி இல்லாமல் சாப்பிட முடியாது. இதற்காக தினமும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி என்று தான் செய்து சாப்பிடுவோம். ஆனால் இந்த மாதிரி ஒரே மாதிரி சட்னி செய்து சாப்பிட்டு சலித்தவர்கள் இன்றைய பதிவில் கூறியிருக்கும் சட்னியை செய்து சாப்பிடுங்கள். சரி வாங்க என்ன சட்னி அதை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

சட்னி செய்ய தேவையான பொருட்கள்:

  1. வெங்காயம்- 1
  2. தக்காளி- 3
  3. காய்ந்த மிளகாய்- 7
  4. கடலை பருப்பு- 1 தேக்கரண்டி
  5. உளுத்தப்பருப்பு- 1 தேக்கரண்டி
  6. பூண்டு- ஒரு கைப்பிடி
  7. இஞ்சி- 1 துண்டு
  8. கருவேப்பிலை- ஒரு கைப்பிடி
  9. பெருங்காய தூள்- 1/4 தேக்கரண்டி

சட்னி செய்முறை:

 hotel style kara chutney in tamil

அடுப்பில் கடாய் வைத்து நல்லெண்ணெய் 2 தேக்கரண்டி ஊற்றி கொள்ளவும். எண்ணெய் சூடானதும் 1தேக்கரண்டி, உளுத்தப்பருப்பு, 1 தேக்கரண்டி கடலைப்பருப்பு, பூண்டு ஒரு கைப்பிடி, சிறிய துண்டு இஞ்சி, காய்ந்த மிளகாய் 7, கருவேப்பிலை ஒரு கைப்பிடி, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நிறம் மாறியதும் நறுக்கிய 3 பெரிய தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி சுருங்கி வந்ததும் அடுப்பை அணைத்து ஆற விடவும்.

வதக்கி வைத்த பொருட்கள்ஆறியதும் அரைத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து கொள்ளவும். தாளிப்பதற்கு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி 1தேக்கரண்டி, உளுத்தப்பருப்பு, 1 தேக்கரண்டி கடலைப்பருப்பு, 1 தேக்கரண்டி கடுகு, 1/4 தேரண்டி பெருங்காய தூள், ஒரு கைப்பிடி கருவேப்பிலை சேர்த்து வதக்கி விட்டு அரைத்த சட்னியில் சேர்க்கவும்.

இட்லி, தோசைக்கு சரியான சட்னின்னு அது இதாங்க..! சொல்லும் போதே ஆசையா இருக்கு வாங்க செஞ்சு சாப்பிட்டு பார்ப்போம்..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now