நெல்லிக்காய் மிட்டாய் செய்வது எப்படி? | How to Make Amla Candy in Tamil
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. முடி அடர்த்தியாக வளர மற்றும் பொலிவான சருமம் பெற வேண்டுமா? இதற்கு நீங்கள் தனி தனியாக எந்த ஒரு டிப்ஸையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நெல்லிக்காய் ஒன்று போதும். நெல்லிக்காய் முடி வளர்ச்சிக்கு ஒரு சிறந்த உணவு பொருள் ஆகும். மேலும் இந்த நெல்லிக்காய் பொலிவான சருமத்தை பெறவும் உதவி செய்கிறது. ஆக இந்த நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தாலே நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்க கூடும். இதனால் முடி வளர்ச்சி அதிகரிக்க கூடும் மற்றும் பொலிவான சருமத்தையும் பெற முடியும். இருந்தாலும் பலர் இவற்றில் இருக்கும் புளிப்பு சுவை காரணமாக இதை சாப்பிட விரும்புவதில்லை. ஆக நெல்லிக்காயில் மிட்டாய் செய்து சாப்பிடலாம். இதன் மூலம் நெல்லிக்காயில் உள்ள முழுமையான ஊட்டச்சத்துக்களை நாம் பெற முடியும். சரி வாங்க இந்த நெல்லிக்காய் மிட்டாய் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- பெரிய நெல்லிக்காய் – ஒரு கிலோ
- சர்க்கரை – ஒரு கப்
- சர்க்கரை பவுடர் – 1/2 கப்
- ஒரு எலுமிச்சை பழம் சாறு
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
நெல்லிக்காய் மிட்டாய் செய்முறை – How to Make Amla Candy in Tamil:
நெல்லிக்காயை சுத்தமாக கழுவி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.
பின் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 8 நிமிடம் வேகவைக்க வேண்டும்.
8 நிமிடம் கழித்து நெல்லிக்காயை அடுப்பில் இருந்து இறக்கி தண்ணீரை முழுமையாக வடிகட்டி நன்றாக ஆறவைக்கவும்.
நெல்லிக்காய் நன்கு ஆறியதும், அவற்றில் இருக்கும் விதையை முழுமையாக நீக்கிவிட்டு, மேல் படத்தில் காட்டியுள்ளது போல் சிறு சிறு துண்டுகளாக கட் செய்து கொள்ளுங்கள்.
பிறகு அதில் ஒரு கப் சர்க்கரை மற்றும் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும். பிறகு மூடி போட்டு ஒரு நாள் முழுவதும் நெல்லிக்காயை சர்க்கரையில் ஊறவைக்கவும்.
பின் மறுநாள் திறந்து பார்த்தால் சர்க்கரை முழுவதும் கரைந்து பாகு போல் இருக்கும். சர்க்கரை பாகை வடிகட்டிவிட்டு நெல்லிக்காயை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளுங்கள்.
பின் ஒரு தாம்பூலம் தட்டில் நெல்லிக்காயை பரவலாக கொட்டி வெயிலில் இரண்டு நாட்கள் காயவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். வெயில் அதிகமாக இருந்தால் ஒரு நாள் மட்டும் காயவைத்து எடுத்தால் போதும். நெல்லிக்காய் தொட்டு பார்த்தால் சுத்தமாக தண்ணீர் இருக்க கூடாது அந்த அளவிற்கு வெயிலில் காயவைத்து எடுத்தால் போதும்.
இவ்வாறு காயவைத்த நெல்லிக்காயுடன் சர்க்கரையை பவுடர் 1/2 கப் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள்.
பிறகு காற்றுப்புகாத பாட்டிலில் சேர்த்து தினமும் இரண்டு துண்டு காலை மற்றும் மாலை சாப்பிட்டு வந்தால் போதும். உடல் ஆரோக்கியம் பெறும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வாழை இலை இருந்தா போதும் நாவில் கரையும் ஹல்வா 10 நிமிடத்தில் செய்திடலாம்
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |