நாவில் கரையும் வாழைப்பழ அல்வா செய்முறை..! Banana halwa recipe in tamil..!

Advertisement

நாவில் கரையும் வாழைப்பழ அல்வா செய்முறை (Banana halwa recipe in tamil)..!

இன்று சமையல் குறிப்பு பகுதியில் நாவில் கரையக்கூடிய சுவையான வாழைப்பழ ஹல்வா செய்வது  எப்படி என்று காண்போம் வாங்க.

பொதுவா நம்ம வீட்டில் அதிகமாக வாழைப்பழம் இருந்தால் அதை வீணாக்கிவிடுவோம், இனி அவ்வாறு வீணாக்க வேண்டிய அவசியம் இருக்காது, நம்ம வீட்டில் வாழைப்பழம் அதிகமாக இருந்தால் அதை வீணாக்காமல் நாவில் கரையக்கூடிய சுவையான வாழைப்பழம் ஹல்வா செய்வது எப்படி என்று இந்த பகுதியின் நாம் படித்தறிவோம் வாங்க.

இதையும் படிக்கவும்  வாழைப்பழ கேக் செய்வது எப்படி? தெளிவான செய்முறை விளக்கம்..!

வாழைப்பழ அல்வா செய்முறை (Banana halwa recipe in tamil):

அல்வா செய்முறை – தேவையான பொருட்கள்:

  • வாழைப்பழம் – 7 அல்லது 8.
  • சர்க்கரை அல்லது நாட்டு சர்க்கரை – ஒரு கப்.
  • நெய் – 5 ஸ்பூன்.
  • நட்ஸ் – இரண்டு கையளவு.
  • கான் பிளவர் மாவு – இரண்டு ஸ்பூன்.
  • தண்ணீர் – தேவையான அளவு.

வாழைப்பழ அல்வா செய்முறை (Banana halwa recipe in tamil) & ஹல்வா செய்வது எப்படி ?

Banana halwa recipe in tamil step: 1

வாழைப்பழ அல்வா செய்முறை முதலில் வாழைப்பழத்தில் உள்ள தோல்பகுதியை தனியாக உரித்து எடுத்து விடவும்.

பின்பு உரித்த வாழைப்பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

Banana halwa recipe in tamil step: 2

பின்பு அவற்றை மிக்சியில் நன்றாக அரைத்து கொள்ளவும்.

பிறகு அடுப்பில் நான்ஸ்ட்டிக் கடாயை வைத்து  அவற்றில்  ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து உருக்கி கொள்ளவும், பின்பு அவற்றில் ஒரு கையளவு முந்திரி, பாதாம், பிஸ்தா ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

Banana halwa recipe in tamil step: 3

பின்பு அதே பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு அவற்றை அரைத்து வைத்துள்ள வாழைப்பழ கலவையை சேர்த்து கிளறி விட வேண்டும்.

இந்த கலவையானது ஓரளவு கெட்டியான பதம் வரும் வரை அடுப்பை மிதமான சூட்டில் வைத்து  10 முதல் 15 நிமிடங்கள் வரை நன்றாக கிளறி கொண்டே இருக்க வேண்டும்.

Banana halwa recipe in tamil step: 4

கலவையானது கெட்டியானதும், ஒரு கப் சர்க்கரை சேர்த்து கிளறி விடவும். சர்க்கரையை சேர்த்த பிறகு கலவையை நன்றாக கிளறி விட வேண்டும்.

பின்பு ஒரு பவுலை எடுத்து கொள்ளவும். அவற்றில் 5 ஸ்பூன் கான் பிளவர் மாவு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து, நன்றாக கரைத்து கொள்ளவும். பின்பு இந்த கரைத்த மாவை வாழைப்பழ ஹல்வாவில் சேர்த்து கிளறி விடவேண்டும்.

Banana halwa recipe in tamil step: 5

இறுதியாக இந்த வாழைப்பழ ஹல்வாவில் வறுத்து வைத்துள்ள முந்திரி, பாதாம் மற்றும் பிஸ்தாவை சேர்த்து கிளறிவிடவும்.

அவ்வளவுதான் வாழைப்பழ அல்வா செய்முறை முடிந்தது. சுவையான வாழைப்பழ அல்வா தயார். அனைவருக்கும் அன்புடன் பரிமாறவும்.

சமையல் குறிப்பு:

வாழைப்பழ ஹல்வா (Banana halwa) செய்யும் பொழுது அடுப்பை மிதமான சூட்டில் வைத்துதான் வாழைப்பழ அல்வா செய்ய வேண்டும்.

அதேபோல் கான் பிளவர் கரைந்து ஊற்றிய பிறகு கலவையை விடாமல் கிளறி கொண்டே இருக்க வேண்டும், இல்லையெனியல் கலவை கட்டிபிடித்துவிடும்.

 

இதையும் படிக்கவும்  ரொம்ப டேஸ்ட்டான கோதுமை ஸ்வீட்..! அப்பறம் குலாப் ஜாமுனை மறந்துடுவீங்க..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal
Advertisement