மீதமான சாதத்தில் என்ன செய்வது
ஹாய் நண்பர்களே..! அனைவரும் வீட்டிலும் சாதம் சாப்பிடுகிறார்கள். சமைக்கும் போது சாப்பாடு ருசியாக இருக்க வேண்டும் அதுபோல சாப்பாடு மீதம் ஆக கூடாது என்று பாத்து பாத்து சமைத்தாலும் எப்படியாவது சாதம் மீதம் ஆகிவிடும். சமைக்கும் தாய்மார்களுக்கு மீதமுள்ள சாப்பாட்டை குப்பையில் போடுவதற்கு விருப்பம் இருக்காது. சிலர் மீதமுள்ள சாதத்தை தண்ணீர் ஊற்றி மறுநாள் பழைய சாதம் போல் சாப்பிடுவார்கள். இனிமேல் சாதம் மீதம் ஆகிவிட்டால் நீங்கள் இப்படி செய்ய வேண்டாம். மீதமுள்ள சாதத்தை வைத்து ருசியான Egg பிரைட் ரைஸ் செய்வது எப்படி என்று இன்றைய பதிவில் தெரிந்துகொள்ளாம்.
இதையும் படியுங்கள்⇒ இட்லியில் சூப்பரான ஈவ்னிங் ஸ்நாக்ஸ் செய்யலாம்..!
எக் பிரைட் ரைஸ்க்கு தேவையான பொருட்கள்:
- சாதம்- 2 கப்
- முட்டை- 2
- வெங்காயம்- 2
- பச்சைமிளகாய்- 2
- கேரட்- 1
- பீன்ஸ்- 2
- தக்காளி- 2
- மிளகு தூள்- 1 தேக்கரண்டி
- டொமேட்டோ கெட்சப்- 1தேக்கரண்டி
- உப்பு- தேவையான அளவு
எக் ரைஸ் செய்முறை:
ஸ்டேப் -1
முதலில் வெங்காயம், பீன்ஸ், பச்சை மிளகாய், கேரட், தக்காளி இவை அனைத்தையும் பொடியாக நறுக்கி தனி தனியாக வைத்துக்கொள்ளவும். அதன் பிறகு மற்றொரு பாத்திரத்தில் சாதத்துடன் 2 முட்டையை உடைத்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
ஸ்டேப் -2
அடுத்ததாக அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் சேர்க்க வேண்டும். பாத்திரம் சூடான பிறகு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதன் பின் நறுக்கிய கேரட், பீன்ஸ் சேர்த்து 1 நிமிடம் வரை வதக்க வேண்டும்.
ஸ்டேப் -3
1 நிமிடம் வதக்கிய பிறகு தக்காளி, உப்பு தேவையான அளவு மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து மீண்டும் 1 நிமிடம் வதக்க வேண்டும். இந்த பொருட்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து நன்றாக வதங்கி ஒரு பதத்திற்கு வந்த உடனே முட்டை கலந்த சாதத்தை இதனுடன் சேர்த்து கலந்து விடவேண்டும்.
ஸ்டேப் -4
எக் பிரைட் ரைஸ் ரெடியான பிறகு மிளகு தூள் சேர்த்து 2 நிமிடம் அடுப்பில் இருக்க வேண்டும். அதன் பிறகு அடுப்பை அணைத்து விட்டு சூடாக சாப்பிட வேண்டியதான். இந்த egg fride rice குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |