குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இட்லி ப்ரை செய்யலாம் வாங்க !!!

idly fry

இட்லி ப்ரை( idly fry ) செய்யலாம் வாங்க !!!

சாதாரணமா குழந்தைகளுக்கு இட்லி என்றாலே பிடிக்காது. பள்ளிக்கு செல்லும் குழந்தைக்கு காலை உணவாக இட்லி கொடுத்திங்கனா  அத விரும்பி சாப்பிடமாட்டாங்க.

இருந்தாலும் காலை உணவுக்கு இட்லியை போன்ற ஒரு சிறந்த உணவு வேறு எதுவும் இல்லை.

எனவே குழந்தையை கவரும் வகையில் இட்லியை சுவையாகவும், வித்தியாசமாகவும் எதாவது இட்லி ப்ரை( idly fry ) செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

idly fry செய்ய தேவையான பொருட்கள்:

 1. இட்லி – 6
 2. கடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன்
 3. அரிசி மாவு – 1/2 டேபிள் ஸ்பூன்
 4. சோளமாவு – 1/2 டேபிள் ஸ்பூன்
 5. இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
 6. மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
 7. மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
 8. கரம் மசாலா தூள் – 1/2 டீஸ்பூன்
 9. உப்பு – தேவையான அளவு
 10. தண்ணீர் – தேவையான அளவு
 11. எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

இட்லி குறைந்தளவு 3 மணி நேரமாவது குளிர்சாதன பெட்டியில் வைத்திருக்க வேண்டும்.

பின்பு நீளவாக்கில் இட்லியை துண்டு துண்டாக வெட்டி கொள்ள வேண்டும்.

இட்லியை தவிர மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளவும்.

பிறகு இந்த கலவையில் வெட்டி வைத்துள்ள இட்லி துண்டுகளை சேர்த்து நன்றாக கலந்து திரும்பவும் 1 மணி நேரம் குளிர்சாதன பெட்டில் வைக்க வேண்டும்.

ஒரு மணி நேரம் கழித்து இந்த கலவையை வெளியே எடுக்க வேண்டும்.

பின்பு ஒரு கடாயை எடுத்து கொண்டு அவற்றை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்ற வேண்டும்.

எண்ணெய் நன்றாக காய்ந்தவுடன் இந்த கலவையை கொஞ்ச கொஞ்சமாக போட்டு பொரித்து எடுக்கவும்.

அவ்வளவுதான் சுவையான இட்லி ப்ரை தயார்.

இந்த இட்லி ப்ரை உங்கள் குழந்தை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.com
SHARE