இட்லி மாவில் போண்டா செய்முறை..! Idli Mavil Bonda Seivathu Eppadi..!
வணக்கம் நண்பர்களே.. நமது காலை மற்றும் இரவு உணவுகளில் பெரும்பாலும் இடம் பெற்றிருக்கும் உணவுகள் இட்லி மற்றும் தோசை. இவற்றில் பெரும்பாலோனோரு தோசையை விரும்பி சாப்பிடுவார்கள். இட்லி மாவில் தான் இந்த உணவுகள் தயார் செய்கின்றன. இட்லி மாவில் இட்லி, தோசை மட்டும் தான் செய்ய முடியுமா.. வேறு எந்த ஒரு உணவுகளையும் செய்ய முடியாது என்று நினைத்துக்கொண்டிருக்கின்றன. இட்லி மாவை பயன்படுத்தி நாம் பலவகையான ஸ்னாக்ஸ் செய்து அசத்தலாம். அந்த வகையில் இந்த பதிவில் இட்லி மாவை பயன்படுத்தி போண்டா செய்வது எப்படி? என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்ப்போம் வாங்க.
தேவையான பொருட்கள்:
- இட்லி மாவு – ஒரு கப்
- அரிசி மாவு – மூன்று ஸ்பூன்
- ரவை – மூன்று ஸ்பூன்
- சோடா உப்பு – ஒரு சிட்டிகை
- தேங்காய் – பொடிதாக நறுக்கியது (1/4 கப்)
- பெரிய வெங்காயம் – ஒன்று (பொடிதாக நறுக்கியது)
- கொத்தமல்லி இலை – பொடிதாக நறுக்கியது சிறிதளவு
- கருவேப்பிலை – பொடிதாக நறுக்கியது சிறிதளவு
- மிளகு – ஒரு ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- பச்சை மிளகாய் – இரண்டு பொடிதாக நறுக்கியது
- சமையல் எண்ணெய் – 1/2 லிட்டர்
இட்லி மாவில் போண்டா செய்முறை:
ஸ்டேப்: 1
ஒரு சுத்தமான பவுலை எடுத்துக்கொள்ளுங்கள் அவற்றில் ஒரு கப் இட்லி மாவு, மூன்று ஸ்பூன் அரிசி மாவு, ரவை மூன்று ஸ்பூன், சோடா உப்பு ஒரு சிட்டிகை, பச்சை மிளகாய் இரண்டு பொடிதாக நறுக்கியது, மிளகு ஒரு ஸ்பூன், கொத்தமல்லி இலை சிறிதளவு, கருவேப்பிலை சிறிதளவு, பொடிதாக நறுக்கிய தேங்காய் சிறிதளவு மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக மாவை கலந்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 2
இவ்வாறு கலந்து வைத்த மாவை 10 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். 10 நிமிடங்கள் ஆனதுக்கு பிறகு மாவை போண்டா செய்ய பயன்படுத்தலாம்.
ஸ்டேப்: 3
இப்பொழுது அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் 1/2 லிட்டர் எண்ணெய் ஊற்றை நன்கு சூடேற்றவும். எண்ணெய் நன்கு சூடேறியது போண்டா மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாக பொரித்தெடுக்க வேண்டும்.
அவ்வளவு தான் சூடான மற்றும் மொறுமொறுப்பான போண்டா தயார். மிக எளிமையாக பத்தே நிமிடத்தில் இட்லி மாவில் நீங்கள் இந்த போண்டாவை செய்துவிடலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த போண்டாவிற்கு சைடிஷாக தேங்காய் சட்னி அல்லது புதினா சட்டினி அல்லது கொத்தமல்லி சட்னி செய்து சாப்பிட்டால் மிகவும் அருமையான சுவையில் இருக்கும்.
இட்லி மாவில் வடை செய்வது எப்படி? |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |