இட்லி மாவு பணியாரம் செய்வது எப்படி? | Idli Maavu Paniyaram Seivathu Eppadi
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஸ்னாக்ஸ் சாப்பிடுவதை அதிகமாக விரும்புவார்கள். அதிலும் மாலை நேரத்தில் பள்ளி படிப்பை முடித்துவிட்டு வீடு திரும்பும் போது குழந்தைகள் வந்த உடனே என்ன ஸ்னாக்ஸ் இருக்கிறது என்றுதான் முதலில் கேட்பார்கள். குழந்தைகளுக்கு வித்தியாசமாக மாலை நேரத்தில் ஸ்னாக்ஸ் செய்துகொடுத்தால் சாப்பிட்டு மகிழ்வார்கள். அந்த வகையில் நாம் இந்த பதிவில் இட்லி மாவு இருந்தால் போதும். அதை வைத்து ஐந்தே நிமிடத்தில் சுவையான பணியாரம் செய்து அசத்தலாம். வாங்க அதை எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்…
இட்லி மாவில் போண்டா செய்வது எப்படி? |
இட்லி மாவில் பணியாரம் – தேவையான பொருள்:
- இட்லி மாவு – தேவையான அளவு
- வெங்காயம் – 1
- கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் – 1
- கருவேப்பிலை – சிறிதளவு
இட்லி மாவு பணியாரம் செய்முறை விளக்கம்:
step: 1
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளவும். கடாயில் சிறிதளவு கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வறுத்து கொள்ளவும்.
step: 2
அதன் பிறகு கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்புடன் பச்சை மிளகாய், கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
step: 3
நன்றாக வதக்கிய பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கிக்கொள்ளவும். வதக்கிய பிறகு எடுத்து வைத்துள்ள இட்லி மாவில் வதக்கி வைத்துள்ளதை சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
இட்லி மாவில் வடை செய்வது எப்படி? |
step: 4
இட்லி மாவானது நன்றாக கெட்டியான பதத்தில் இருக்க வேண்டும். தங்களிடம் இருக்கும் இட்லி மாவு கெட்டியான நிலையில் இல்லாவிட்டால் மாவில் சிறிதளவு அரிசி மாவினை சேர்த்து கிளறிக்கொண்டால் தண்ணியாக இருக்கும் இட்லி மாவு கெட்டியாக மாறிவிடும்.
step: 5
இப்போது கடாயில் பணியார சட்டியை வைத்து அதில் இருக்கக்கூடிய குழிகளில் கலந்து வைத்துள்ள மாவினை கரண்டியால் ஊற்ற வேண்டும். இரண்டு நிமிடம் கழித்து பணியாரம் எடுக்கும் கம்பியால் பணியாரத்தை திருப்பி விடவும்.
step: 6
பணியாரமானது உள்ளே நன்றாக வெந்து பணியாரம் போன்று உப்பி வந்ததும் கம்பியால் எடுத்து தனியாக ஒரு பிளேட்டில் வைக்கவும். அவ்வளவுதாங்க மாலை நேரத்தில் சாப்பிடக்கூடிய சுவையான இட்லி மாவு பணியாரம் ரெடியாகிட்டு. ட்ரை பண்ணி பாருங்க..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |